கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!
கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் மலைகிராம விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை,பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு, பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும்,விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பலா, காப்பி, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட மலை பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று இரவு இப்பகுதிதிகளில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் பலா மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
மேலும் 4 லட்சம் மதிப்புள்ள பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளதாக விவசாயி கவலையுடன் கூறுகின்றனர். காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுப்பதற்கு பல முறை மனு அளித்தும் வன துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி கிராம விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஒற்றை காட்டு யானையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மலை கிராம விவசாயிகள் வன துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் வருவதை தடுப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாக பேத்துப்பாறை குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தபகுதிகள் மலையடிவார பகுதியாக இருப்பதால்,இப்பகுதியை ஒட்டியுள்ள வன பகுதியின் வழியாக கொடைக்கானல் பகுதியில் ஊருக்குள் காட்டு யானை அடிக்கடி வருகிறது. மேலும் இந்த மலை கிராமங்களில் விளைவிக்கப்படும் பயிர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் வந்து பொதுசொத்துக்களை சேதப்படுத்துவதுடன் அவ்வப்போது உயிர்பலியும் ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானை தாக்கியதில் கடந்த 2 வருடத்திற்குள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் , குறிப்பாக கொடைக்கனாலுக்குச் செல்ல மலை வழிமார்க்கமாக செல்லும் சூழ் நிலையில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டுயானை மலைவழிச்சாலையாக செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறிப்பதும், அச்சுறுத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தேனியில் சிக்கி தவிக்கும் ஓபிஎஸ், தகவலை படித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்... பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?