அடுப்பு கரி புகையால் மூச்சு திணறி 2 பேர் உயிரிழப்பு - கொடைக்கானலுக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் தங்கும் அறையில் அடுப்பு கரி புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு சுற்றுலா வந்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று திருச்சியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர். இங்குள்ள சின்னபள்ளத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரண்டு அறை எடுத்து தங்கி உள்ளனர். மேலும் கொடைக்கானலில் உள்ள மதுபான கடையில் மதுபானம், பார்பிக்யூ செய்ய சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள், மேலும் அதனை தயார் செய்ய அடுப்பு கரி, மற்றும் அடுப்பு ஆகியவற்றை தயார் செய்து தங்கும் அறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று நண்பகல் முதல் இரவு வரை விடாமல் மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிர் நிலவி வந்தது.
Watch Video: "ஜோடா மட்டும் வாங்கியாரத் தெரியுமா?" ஜீன்ஸ் காட்சியை மீண்டும் நடித்த ராதிகா..
இதனையடுத்து இந்த நான்கு இளைஞர்களும் நேற்று இரவு மது அருந்தி விட்டு, அடுப்பு கரியை கொண்டு தங்கும் அறையிலேயே பார்பி சிக்கன் சமைத்துள்ளனர். பிறகு ஆனந்த பாபு, ஜெயகண்ணன் ஆகிய இருவரும் ஒரு அறையிலும் சிவசங்கர், சிவராஜ் (சகோதரர்) ஆகிய இருவர் வேறு ஒரு அறையிலும் உறங்கியுள்ளனர். இதில் இரவு பார்பி சிக்கன் சமையல் முடித்து விட்டு அந்த அடுப்பினை அணைக்காமல் தங்களது அறையியே குளிருக்காக அப்படியே விட்டு விட்டு உறங்கி உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று காலை அவர்களை எழுப்ப சென்ற போது அவர்கள் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளனர்.
வகுப்பறையில் வரிசையாக மயங்கி விழுந்த மாணவிகள் - செங்கோட்டையில் அதிர்ச்சி
அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து அவர்களை சோதித்த போது அந்த இருவரும் உயிர் இழந்ததாக தெரிந்தது. அதனை தொடர்ந்து கொடைக்கானல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது நேற்று இரவு அடுப்பு கரி அமைக்காமல் அறையிலேயே வைக்கபட்டிருந்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
VJ Chitra: நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அதனை தொடர்ந்து இறந்து போன அந்த இருவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே இது போல அடுப்பு கரி புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த மூன்று சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.