மேலும் அறிய

Watch Video: "ஜோடா மட்டும் வாங்கியாரத் தெரியுமா?" ஜீன்ஸ் காட்சியை மீண்டும் நடித்த ராதிகா..

கிழக்கே போகும் ரயில் படம் மூலமாக நடிகையாக அறிமுகமாகிய ராதிகாவின் 46 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு அவரது மகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத வகையில் என்றென்றும் சில நடிகைகள் மட்டுமே ரசிகர்கள் மனதில் இருப்பார்கள். அவர்களில் நடிகை ராதிகாவிற்கு என்றுமே தனி இடம் உண்டு.

கதாநாயகியாக அறிமுகமாகி இன்று குணச்சித்திர கதாபாத்திர கதாபாத்திரத்திலும் அசத்தி வரும் நடிகை ராதிகா முதன்முதலாக கிழக்கே போகும் ரயில் என்ற படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். அவர் நடிகையாக அறிமுகமாகி இன்றுடன் 46 வருடங்கள் ஆகிறது.

ராதிகாவின் 46 ஆண்டுகால திரைப்பயணம்:

1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலி என்ற கதாபாத்திரம் மூலமாக நடிகையாக அறிமுகமான நடிகை ராதிகா திரைக்கு வந்து 46 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவரது மகள் ரயனே மிதுன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ராதிகா ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள அவரது வசனமான ஆடு வாங்கத் தெரியாது, கோழி வாங்கத் தெரியாது, ஜோடா (சோடா) மட்டும் வாங்கிட்டு வரத் தெரியுமா? என்ற வசனத்தை பேசி அசத்தியுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து, 46 ஆண்டுகளுக்கு இந்தியாவில் மிகச்சிறந்த நடிகை ஒருவர் அறிமுகமானார். கூச்ச சுபாவமுள்ள இளம் பெண்  தன்னம்பிக்கையான பல்துறையில் பங்களிக்கக்கூடியவராக மாறியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Rayane R Mithun (@rayanemithun)

தவறென்று நிரூபித்தவர்:

என் தாய் ஒன்றும் விதிவிலக்கானவர் அல்ல. அவருக்கு குழந்தை பிறந்தவுடன் அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். அவருக்கு வயதானவுடன் அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். ஆனால், அவர் அனைத்தையும் தவறு என்று நிரூபித்தார். அனைத்தையும் தவறு என்று நிரூபித்து வலுவாக திரும்பி வந்தார்.

கலையின் மீதான அவரது அன்பும், அர்ப்பணிப்பும் வேறு. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அம்மா நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

உச்சநட்சத்திரங்களுக்கு ஜோடி:

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், சிவகுமார், மோகன், சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித், பிரசாந்த் என பல நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமின்றி பல படங்களில் குணச்சத்திர கதாபாத்திரம் மூலமாக தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான சித்தி, சித்தி 2 தொடர்கள் மிக மிக பிரபலம் ஆகும். நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட ராதிகா பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் என்பதும், சரத்குமாரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget