மேலும் அறிய
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Nov. 30th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- டிட்வா புயல் இன்று இரவு சென்னைக்கு நெருக்கமாக வரும்போது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
- “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 220 கி.மீ. தொலைவில் மையம். அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு கடலோர பகுதிகளுக்கு இணையாக புயல் வடதிசையில் நகரும்” -வானிலை ஆய்வு மையம்
- டிட்வா புயலால் தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 38 நிவாரண முகாம்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- டிட்வா புயல் கனமழையால் 56,000 ஹெக்டேர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாகவும், நிவாரணம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தகவல்.
- டிட்வா புயலின் வேகமும், மழையும் குறைந்ததை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் இன்று வழக்கம் போல் இயக்கம் - சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மட்டும் இன்று (நவ.30) ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பரப்புரை பயணத்தை கோபி தொகுதியில் இருந்து இன்று மீண்டும் தொடங்குகிறார் இபிஎஸ்.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியாவிற்குள் ஊடுருவ உதவும் 72 பயங்கரவாத தளங்களை, தொலைதூரப் பகுதிகளுக்கு பாகிஸ்தான் இடம் மாற்றியுள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை தகவல்.
- இலங்கையின் கண்டி-சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால், 23 தமிழர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்கள் தொடர்வதால், காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70,000-த்தை தாண்டியுள்ளது.
- உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியான நிலையில், கருங்கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்கி அழித்துள்ளது உக்ரைன்.
- ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதி மெதுவாகப் பிளந்து, அடுத்த 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிய பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் கணிப்பு.
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















