கால நிலை மாற்றங்கள்: நறுமணப்பொருட்களில் பிரதானமான ஏலக்காய் விவசாயம் சிக்கல்..
கொட்டி தீர்க்கும் பருவ மழை ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ ஏலக்காய் 1300 ருபாய் என விற்பனையாகி வருகிறது.
ஏலம் என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச்சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்,சிறிய ஏலக்காய் எலெட்டாரியா), பெரிய ஏலக்காய், இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை. இத்தகை ஏலக்காய், இந்திய துணைக் கண்டத்தில் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இப்படி தனி சிறப்பு பெற்ற ஏலக்காய் கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களே ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவ மழை எதிர்பார்ப்பில் உள்ள நிலையிலும் சென்ற மாதங்களில் போதிய பருவ மழையின்மையாலும். கடந்த சில தினங்களாக ஏலக்காய் வர்த்தகம் போதிய அளவில் நடைபெறவில்லை. இதன் எதிரொலியாக ஏற்றுமதி வர்த்தகம் குறைவாலும் சென்ற மாதம் வரை ஏலக்காய் வர்த்தகம் குறைந்திருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இருப்பினும் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளதால் ஏலக்காய் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ ஏலக்காய் 900 ருபாய் முதல் 1300 ருபாய் வரை ஏலம்போனது.