மேலும் அறிய

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் ஒப்படைப்பு - மத்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தகவல்

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை மற்றும் மாநில அரசு சார்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வழக்கறிஞர் கனிமொழி மதி, உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் கடந்த 2016 ஆண்டு பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்.” வைகை ஆற்றங்கரை நாகரீகம் குறித்து கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் சங்ககால நகர நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று கீழடியில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இங்கு அகழாய்வு பணியை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் ஒப்படைப்பு -  மத்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தகவல்

கீழடியில் நடைபெற்ற 2 கட்ட அகழாய்வில் 2200 ஆண்டு பழமையான 5000-த்துக்கும் அதிகமான பழங்கால பொருட்கள் எடுக்கப்பட்டன. இங்கு நன்கு கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் இயங்கி வந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கீழடியில்3-ம் கட்ட ஆய்வுப்பணியை தொடங்கும் நிலையில் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, அசாம் மாநிலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஜோத்பூரில் தொல்லியல் பொருட்கள் பாதுகாவலரான ஸ்ரீராமன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் ஒப்படைப்பு -  மத்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தகவல்

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், 15 ஆண்டுகளாக தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் பணியை மட்டுமே செய்து வந்துள்ளார். இவருக்கு அகழாய்வு பணியில் போதிய அனுபவம் இல்லை. அகழாய்வு பணியில் முக்கியமான பணி பழங்கால பொருட்களின் உண்மையான காலத்தை கண்டறிவது (ரிப்போர்ட் ரைட்டிங்) ஆகும். இதில் தற்போதைய கண்காணிப்பாளருக்கு அனுபவம் கிடையாது. அகழாய்வு பணியில் சிறப்பாக செயல்பட்ட கண்காணிப்பாளர் இடமாறுதல் செய்யப்பட்டிருப்பது வரலாற்றை மறைக்கும் முயற்சி என கருதப்படுகிறது. எனவே அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வு பணியை தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” மேலும் அங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சியில் ஒன்றிய அரசும் மாநில அரசு ஈடுபட வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் ஒப்படைப்பு -  மத்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தகவல்

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரான வழக்கறிஞர் கனிமொழி மதி, ஆஜராகி..,” கீழடியில் சிறிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தவில்லை. மேலும் முதல் 3 கட்ட சோதனையின் போது கிடைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அருங்காட்சியகத்தில் வைக்கவில்லை. தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு குறித்த 1 முதல் 3 கட்ட  அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறை வெளியிடப்படவில்லை என வாதிட்டார்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் ஒப்படைப்பு -  மத்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தகவல்

இதனைத்தொடர்ந்து தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி, கீழடியில் 9 கட்ட அகழாய்வு நிறைவடைந்து, 10ம் கட்ட அகழாய்வு விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அகழாய்வு பணிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வரலாற்று தொடர்பான விவரங்களை மத்திய அரசு தான் தெரிவிக்க வேண்டும் என வாதிட்டார்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் ஒப்படைப்பு -  மத்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் தகவல்

அப்போது ஒன்றிய அரசின் தொல்லியல் துறை  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது கீழடி அகழாய்வு பணிகளை முழுக்க முழுக்க மாநில அரசே மேற்கொண்டு வருகிறது. முதல் 3 கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், கீழடி அகழாய்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், ஒன்றிய அரசு மேற்கொண்ட அகழாய்வு பணிகள், அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடுவது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget