மேலும் அறிய
Advertisement
Madurai ; சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சாட்சியம் அளித்தார் நீதிபதி பாரதிதாசன்!
வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்பாக விசாரணை நடைபெற்றது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்-மகன் பெனிக்ஸ் காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி அவர்களின் முன் விசாரணையில் சாத்தான்குளம் வழக்கை அன்றைய காலகட்டத்தில் மிக தீவிரமாக விசாரித்து சாத்தான்குளம் போலீசர்கள் ஜெயராஜ் மற்றும் பெனிக்சை காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதை தனது விசாரணை மூலமாக வெளிகொண்டுவந்த இந்த வழக்கின் முக்கிய சாட்சியான குற்றவியல் நீதிபதி பாரதிதாசன் அவர்களின் சாட்சி விசாரணை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ம் வருடம் ஜூன் 19-ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் முதற்கட்டமாக 2027- பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் - மதுரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 60 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டு தொடர்ந்து சாட்சிய விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அதிமுக - பாஜக இடையே மோதல் குறித்த கேள்விக்கு ; ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் என உதயநிதி பதில்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion