சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு வலி இருந்ததாக ஜெயராஜ் கூறினார் - சாத்தான் குளம் கொலை வழக்கில் செவிலியர் சாட்சி
சிறுநீர் கழிக்க முடியாத அளவிற்கு காயம் இருந்ததால் செயற்கை சிறுநீர் பை பொறுத்தியதாகவும் சாட்சியம் அளித்தாக தகவல் வெளியாகி உள்ளது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கின் சாட்சியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலிய பணியாளரான அருணாசல பெருமாள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போது கோவில்பட்டி கிளை சிறையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜை அழைத்து வரும்போது உடல் முழுவதிலும் காயம் இருந்ததாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்ததாகவும் மேலும் சிறுநீர் கழிக்க முடியாத அளவிற்கு காயம் இருந்ததால் செயற்கை சிறுநீர் பை பொறுத்தியதாகவும் சாட்சியம் அளித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 15ஆம் தேதிக்கு வர வாய்ப்புள்ளது. இதனிடையே தனக்கு ஜாமீன் அளிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் ஆய்வாளரான ஸ்ரீதர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நாளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது மத்திய அரசாங்கத்தால் ஜூன் மாதம் 1968 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான வாழ்வாதாரத்தை முன்னேற்ற நிறுவப்பட்டது. இந்த மையத்தில், தொழிற்கல்வி பயிற்றுவித்தல், தொழில் வழிகாட்டுதல், ஆலோசனை, நம்பிக்கை வளர்ப்பு திட்டம், முன் ஆட்சேர்ப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மையத்தின் மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலைவாய்ப்பு அலுவலகம், சாந்தோம் சர்ச் அருகில் சாந்தோம் மெயின் ரோடு, சாந்தோம் சென்னை, என்ற முகவரியில் (நாளை) 12 மார்ச் 2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சென்னையை சுற்றியுள்ள நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் SSLC முதல் பட்டய மேற்படிப்பு (பொறியியல் மற்றும் இதர படிப்பு) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, சென்னையை சேர்ந்த 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன பட்டதாரிகள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.