மேலும் அறிய
Advertisement
Pongal 2022 | ஜல்லிக்கட்டு வீரனுக்கு ஒரு கோயில் ; மதுரையில் ஆச்சரியம் !
அய்யனாரகவும், கருப்பசாமியாகவும் சொரிக்காம்பட்டி மாடுபிடி வீரர் அழாகத்தேவனை அப்பகுதி மக்கள் வேண்டி வணங்குகின்றனர்.
வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்து போனவர்களைத் தியாகிகளாகப் போற்றிய கலாசாரம் நம்முடையது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு. இந்த நடுகல்லே நாளடைவில் குலதெய்வமாக வழிபாடுசெய்யப்பட்டுள்ளன. இப்படி இருக்க மதுரையில் ஜல்லிக்கட்டு வீரருக்கு சிலை ஒன்று வடித்து கோயிலாக வணங்கி வரும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ளது சொரிக்கான்பட்டி கிராமம். நான்கு, 5 தலை முறைக்கு முன்பு ஊர் பெரியவராக பார்க்கப்பட்டவர் தான் கருத்தமாயன். இவருக்கு நான்கு மகன்கள். அதில், அழாகாத்தேவன் நான்காவது ஆளாம். ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும் நண்பன் சமயனோடு சென்றுவிடுவாராம். அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போல அந்த காலத்தில் விக்ரமங்கலம் ஜல்லிக்கட்டு பிரபலானது. தென் மாவட்டங்களில் இருக்கும் சிறந்த காளை அனைத்தும் அங்குதான் களம் இறங்குமாம். அப்போது அந்த ஜல்லிக்கட்டில் அழகாத்தேவன் நண்பன் சமயனோடு இணைந்து முரட்டுகாளை அனைத்தையும் பிடித்துவிடுவாராம்.
விக்ரமங்கலத்தில் பெயர் எடுத்த அழகாத்தேவன் பல்வேறு இடங்களிலும் பரிசுகளுடன் தான் திரும்புவார். இப்படி அழகாத்தேவனும், சமயனும் கீழக்குயில்குடி ' சவாலை ஏற்று மாடு பிடிக்க சென்றுள்ளனர். அப்போது போக்கு காளை ஒன்று சீறிப்பாய்ந்து வந்துள்ளது. எதிர் பாரதவிதமாக அந்த காளை அழகாத்தேவனின் வயிற்றில் பாய்ந்தது. குத்தும், குலையுமா கிடந்த அழகாத்தேவனை நண்பன் சமயன் வயிற்றில் துணியை கட்டி சொரிக்காம்பட்டி தோட்டத்திற்கு கொண்டுவந்துள்ளார். அப்போது சிகிச்சை எடுத்துக் கொண்ட அழகத்தேவன் சிகிச்சையில் முன்னேறியுள்ளார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அழகாத்தேவன் இறந்துவிடுகிறார். இந்நிலையில் அழகாத்தேவனின் நினைவாக அவர் இறந்த நந்தவன தோப்பில் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர் அவரது உறவினர்கள். மாடு பிடி வீரர்களுக்கு சொரிக்காம்பட்டி அழகாத்தேவன் ஒரு முன்னோடி.
சொரிக்காம்பட்டியை சேர்ந்த இளைஞர் சிலர்...," எங்க சியான் அழகாத்தேவன் அசால்டு மாடுபிடிகாரராம் சுத்துபட்டு பூராம், அத்தே சூப்பரா..மாடு அடக்கி புடுவாரம். அவர வணங்கிட்டு போனா வெற்றி தான். எங்களுக்கு உடம்பு முடியாட்டி கூட அவர நினைச்சு திருநீறு போட்டுக்குவோம். அந்த அளவுக்கு துடியா எங்க தலமாடு காப்பாரு. சுத்து கட்டு மாடு பிடி வீரர்கள் மட்டுமில்ல மாட்டுக்காரங்களும் எங்க சியான தான் வணங்கிட்டு போவாங்க" என்றார்.
மன்னர்கள் இறந்தால் மாலைக் கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். அது போல் சொரிக்காம்பட்டியில் ஜல்லிக்கட்டு வீரருக்கு சிலை அடித்து கோயிலாக வணங்கும் முறை சிறப்புடையது. அய்யனாரகவும், கருப்பசாமியாகவும் சொரிக்காம்பட்டி அழகாத்தேவனை அப்பகுதி மக்கள் வேண்டி வணங்குகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
க்ரைம்
க்ரைம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion