Jallikattu: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது பரிசை வாங்க மறுத்த மாடுபிடி வீரர் அபிசித்தர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க வருகை தரும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி கடந்த 17-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 10 சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் 810/காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம்கண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை சிதறிடித்து காளைகளே அதிகளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது. போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரருக்கு 7லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோன்று களத்தில் சிறப்பாக விளையாடிய திருச்சி மாவட்டம் மேலூர் குணா என்பவரது காளை உரிமையாளருக்கு 7 லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் காரும் பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து 2வது இடம்பிடித்த மாடுபிடி வீரரான 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற வீரருக்கு பைக் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பரிசு அறிவிப்பில் அமைச்சரின் சதி நடந்துவிட்டதாக கூறி பரிசை வாங்க மறுத்து புறக்கணித்து சென்றார். இந்நிலையில் பரிசை வாங்கமறுத்த அபிசித்தர் இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.