Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Nov 28th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு
7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 430 கி.மீ தொலைவிலும்
புயல் மையம் கொண்டுள்ளது -வானிலை மையம்
6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை
டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர். தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவினர் விரைந்தனர்.
ரயில்சேவை பாதிப்பு
வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் வீசும் பலத்த சூறை காற்று காரணமாக, பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு செல்லும் ரயில் சேவைகள் நிறுத்தம் சென்னை, கன்னியாகுமரி, மதுரை பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்றுஅரைநாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர் அட்வைஸ்
டிச.9 முதல் ஜன.8 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
S.I.R படிவங்களை பெற்றுக் கொண்டவர்கள் டிச.4 வரை காத்திருக்காமல் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது உதவி மையத்தில் படிவத்தை வழங்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
பலதார மணத்திற்கு எதிராக பாஜக அரசு மசோதா!
அசாமில் பலதார மணத்தை தடை செய்யும் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம். இதன்படி, 2வது திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை.
இந்தச் சட்டம் அனைத்து மதத்தினருக்குமானது. சிலர் நினைப்பது போல முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கம்.
இம்ரான் உடல் நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் முழு உடல் நலத்துடன் உள்ளார். அவரை பற்றி சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களில் உண்மை இல்லை -அடியாலா சிறை நிர்வாகம்
சிறையில் அவருக்கு தேவையான அனைத்து பராமரிப்புகளும் வழங்கப்படுவதாக தெரிவிப்பு. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அவர் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார்.
இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் பலி. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன.
6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிப்பு. மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை தரப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும்| மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தல்.
ஹாக்கி தொடர் கோலாகல தொடக்கம்
24 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் இன்று தொடங்க உள்ளது. சிலி அணியை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. முதல் நாள் 8 லீக் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், சென்னையில் 12 அணிகளும், மதுரையில் 12 அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இரண்டாவது டெஸ்டிலும் கம்மின்ஸ் இல்லை:
ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், வேகப்பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் இடம் பெறவில்லை. கேப்டன் கம்மின்ஸ் இடம் பெறாத நிலையில், 2வது டெஸ்ட்டிலும் ஸ்மித்தே ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த உள்ளார்.






















