மேலும் அறிய
Advertisement
Jallikattu 2024: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்
மாடு பிடி வீரர்களுக்கு கொரோனோ சான்று உடல் தகுதி சான்றுகளை வைத்து ஈ சேவை மையத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
மதுரையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் இன்று மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் இன்று மதுரையில் madurai.nic.in என்ற இணையத்தளத்தில் காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் இ சேவை மையத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்பு காளைகளுக்கு மருத்துவர்கள் வழங்கிய மருத்துவ சான்று மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனோ சான்று உடல் தகுதி சான்றுகளை வைத்து ஈ சேவை மையத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதில் ஒரு மாட்டிற்கு தகுதிச் சான்றிதழ் பெற்று வேற நபர்களின் ஆதார் கார்டு மூலம் முன்பதிவு செய்யக்கூடாது. ஒரு ஊரில் விளையாடும் மாடு பிடி வீரரும் வேறொரு ஜல்லிக்கட்டு போட்டியில் போட்டியிட அனுமதி இல்லை. டோக்கன் களவில் முறைகேடுகளை தவிர்க்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த ஆன்லைன் பதிவின்போது ஒரு ஊர் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே காளைகள் மற்றும் மாடுபிடி வீரர் பதிவு செய்ய முடியும் இவ்வாராக பதிவு செய்த பின்பு அனுமதி மறுக்கப்பட்டால் மற்ற இரண்டு ஊர் போட்டிகளிலும் பங்கேற்கவோ அதற்கான முன்பதிவு செய்யவும் முடியாத நிலை உள்ளது. என்றும் மூன்று ஊர் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் முன்பதிவு செய்து ஏதாவது ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் விதமாக ஆன்லைன் பதிவு மாற்றம் செய்ய வேண்டும் என காளை வளர்ப்போர் மற்றும் மாடு பிடி வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக ஏற்கனவே அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரை குறிப்பிட்டு காளைகளை அவருக்கு கூடாது என கமிட்டியினரிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து காளைகளுக்கு கொம்புகளில் ரப்பர் குப்பி பொறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion