மேலும் அறிய
Advertisement
குரல் கொடுக்க முடியாத மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டியதே அரசின் கடமை - முதலமைச்சர் ஸ்டாலின்
உரத்த குரல் கொடுக்க முடியாத மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டியதே அரசின் கடமை எனவும், மாவட்ட வாரியான தேவைகளை உணர்ந்து ஆட்சியர்கள் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராஜ கண்ணப்பன், சக்கரபாணி, மூர்த்தி, பி.டி.ஆர். உதயநிதி, தலைமை செயலாளர் இறையன்பு, மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், தேனி ஆட்சியர் ஷஜீவனா, திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், சிவகங்கை ஆட்சியர் மதுசூதன ரெட்டி, ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அனைத்து துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தென் மாவட்டத்தை தொழில் ரீதியாக மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புற மக்களின் வருமானத்தை பெருக்கும் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
வேலை உறுதி திட்டங்களில் கீழ் வேலை வழங்கும் சராசரி நாட்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் முன்னுரிமை என்ன என்பதை உணர்ந்து ஆட்சியர்கள் செயல்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது யாரால் உரத்த குரல் கொடுக்க முடியாதோ, அவர்களின் தேவையை உணர்ந்து அவற்றை நிறைவேற்று தருவதே ஆகும்.
சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், திருநங்கைகள் கோரிக்கைகளை அறிந்து நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. சமூக நீதியின் குரலே இப்போது ஓங்கி ஒலிக்கிறது. வேலை, பொருளாதாரம் உள்ளிட்டவையில் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாவட்ட வாரியான தேவைகளை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழ, காய்கறி விவசாயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிவகங்கையில் வறட்சியை கருத்தில் கொண்டு புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். மதுரையின் நகர் பகுதியை மையமாக வைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
அரசின் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களிடம் சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்களுக்கே உண்டு. பட்டா மாறுதல், சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பணி. மக்களை பொருத்த வரை ஆட்சியர்கள் தான் அரசு. அவர்களின் தேவைகளை நீங்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். மனு என்பது வெறும் காகிதம் அல்ல. அது ஒரு மனிதரின் கனவு, வாழ்க்கை, எதிர்காலம்" என தெரிவித்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சியர் அலுவலக வாயிலில் திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குங்குமத்தை கரைத்து ரத்தம் என்று நாடகம்.. பக்கத்து வீட்டுக்காரர்களை சிக்கவைக்க பலே ப்ளான் போட்ட பெண் -நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion