”தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம்” - தமிழிசை சௌந்தராஜன்
தமிழக பாஜக குறித்து நான் ஆளுநர் என்பதால் கருத்து கூற முடியாது - கூட்டணி விவகாரத்தில் என்னை இழுத்துவிடாதீர்கள் - ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பி.ஜே.பி., மாநில தலைவர்கள் அதிகாரம் அற்றவர்கள் எனவும் டெல்லியில் உள்ள தலைமையே கூட்டணி முடிவு எடுக்கும் என்பது போல கூட்டணி கட்சியினர் கூறுவது குறித்த கேள்விக்கு
நான் ஆளுநர் என்பதால் அரசியல் கருத்து பேச முடியாது. பி.ஜே.பி., அ.தி.மு.க., கூட்டணி குறித்தான பேச்சில் என்னை இழுக்காதீர்கள் நான் தலைவராக இருந்த போது கூட்டணி கட்சித் தலைவர்களிடத்தில் எனக்கு நல்ல மரியாதை இருந்தது.
12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம் குறித்த கேள்விக்கு
12 மணிநேர வேலை மசோதா இது தொழிலாளர்களுக்கு அவர்களின் விருப்பப்படி 12 மணி நேரம் அல்லது 8 மணி நேரமாக தொழிலாளர்கள் சகோதரர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் இந்தச் சட்டத்தின் அடிப்படை. உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் குறித்த ஆராய்ச்சி நடந்துள்ளது. அதில் அதிக நேரம் வேலை செய்து அதிக நேரம் ஓய்வு கொடுத்தால் பணியின் சக்தி அதிகரிக்கும் இதனால் குடும்ப வாழ்க்கை பலனுள்ளதாக இருக்கும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது தவிர பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. 12 மணி நேரம் என்று அதிகரிக்கவில்லை பணியின் நேரம் அது தொழிலாளர்களின் விருப்பம் தான் இதனை தொழிலாளர்களின் விருப்பப்படி விட்டுவிடுவது நல்லது.
இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்த வேண்டாம். இது அரசியல் கருத்து கிடையாது மருத்துவ ரீதியாக தொழில் செய்யும் பொழுது தொழிலாளர்கள் நான்கு நாட்கள் நன்கு வேலை செய்துவிட்டு மூன்று நாட்கள் ஓய்வு எடுத்தால் அதற்கு அவர்களின் பணியின் சக்தி அதிகரிக்கிறது ஓய்வு நேரம் அதிகரிக்கிறது பணி செய்வதற்கான ப்ரடிக்டிவிட்டி அதிகரிக்கிறது என அறிவியல் ரீதியாக சொல்கிறார்கள். இதனை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பேச வேண்டும் பொத்தாம் பொதுவாக இதற்கு எதிராக பேசக்கூடாது. தொழிலாளர்களுக்கு நலம் பயக்கும் என்றால் இது நல்லது இது தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமையும் தொழிலாளர்கள் நன்கு வேலை செய்தால் முதலாளிகள் பயனடைவார்கள், முதலாளிகள் பயனடைந்தால் தொழிலாளர்களுக்கு நல்லது. பணி நேரம் அதிகரிக்கவில்லை பணிநேரம் முடிவு குறித்து தொழிலாளர்கள் விட்டு விடுங்கள். இந்த சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. இந்த சட்டம் கர்நாடக மற்றும் டெல்லியில் இந்த சட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளனர்” என்றார்.
பின்னர் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது
ராமநாதபுரத்தில் படித்து வரும் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்க முடியாத நிலை உள்ளது குறித்த கேள்விக்கு:
எய்ம்ஸ்சில் படிக்கிறோமா ராமநாதபுரத்தில் படிக்கிறோமா என்பதில்லை மனிதர்களைப் படிக்கிறோமா நோயைப் படிக்கிறோமா என்பதில் உள்ளது. எய்ம்ஸ்சோ மருத்துவமனையும் செங்கலால் கட்டப்படுவது இல்லை மனிதர்களின் இதயத்தாலும் மனிதாபிமானத்தாலும் கட்டப்படுகிறது. எய்ம்ஸ் என்பது அதிகப்படியான நவீன தொழில்நுட்பத்தோடு உலக தரம் வாய்ந்தது. எல்லா விதத்திலும் உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மருத்துவ வசதி நம் தமிழகத்திற்கு கிடைப்பது கிடைப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. ஆரம்ப காலகட்டத்தில் எல்லாத்துலயும் ஒரு பிரச்னை இருக்கும். முதல் இரண்டு வருடங்கள் எய்ம்ஸ் தான் படிக்க வேண்டும் என்பதில்லை ஆரம்பகால படிப்பை எங்கு வேண்டுமென்றாலும் படிக்கலாம். எய்ம்ஸ் அப்படிதான். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்த பிறகு தான் எல்லோருக்கும் தெரியவரும் எல்லா விமர்சனங்களும் தவிடு பொடி ஆகிவிடும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நிதியமைச்சரின் ஆடியோ உண்மைதானா..? மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.. ஈபிஎஸ் பேட்டி !
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்