மேலும் அறிய

நிதியமைச்சரின் ஆடியோ உண்மைதானா..? மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.. ஈபிஎஸ் பேட்டி !

நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டி.

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது,”சமீபத்தில் வலைதளங்களில் வரும் நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தான். முப்பதாயிரம் கோடி விவாகரத்தை நாங்கள் கவர்னரிடம் புகார் அளிப்போம். மத்திய அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த ஆட்சியில் தி.மு.க., அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை கொள்ளையடிப்பது குறிக்கோளாக கொண்டுள்ளது. எங்கள் மீது எவ்வாறெல்லாம் வழக்கு தொடுக்க முற்பட்டார்கள் முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் அறிக்கை கொடுப்பவர் இந்த ஆடியோ குறித்து ஏன் அறிக்கை கொடுக்கவில்லை.


நிதியமைச்சரின் ஆடியோ உண்மைதானா..? மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.. ஈபிஎஸ் பேட்டி !

 12 மணி நேர சட்ட மசோதாவை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தவர்கள் தற்போது அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள் அதற்கு அவர்களின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அரசு முதலாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது. ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம் வேலை 8 மணி நேர உறக்கம் எட்டு மணி நேரம் ஓய்வு என்று இருக்க வேண்டும் மனிதன் ஒன்று மிஷின் அல்ல.  கொடநாடு கொலை வழக்கில் மர்மம் இருப்பது உண்மை எங்கள் அரசு தான் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தது, நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அந்த பயங்கர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஜாமீன் கொடுத்தது அவர்களுக்காக வாதாடியது தி.மு.க., தான். பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது., கூட்டணி குறித்து நாங்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா போன்றவர்களிடம் தான் பேசுவோம் வேற யாரைப் பற்றியும் பேச வேண்டியது இல்லை என்றும் தெரிவித்தார். இந்த பேட்டிக்கு முன்னதாக மதுரை மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ,ஆர்.பி.உதயகுமார்,மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மதுரை விமான நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மேடையில் பேசிய போது தேர்தல் ஆணையம் நம்மளை அங்கீகரித்துள்ளது அங்கீகரித்த முதல் நிகழ்ச்சியாக தற்போது மதுரை வந்துள்ளேன். மதுரை மண் அதிமுகவுக்கு ராசியான மண் என தெரிவித்தார் தொடர்ந்து அதிமுக கழகத் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றனர். தொடர்ந்து சாலை மார்க்கமாக விருதுநகர் புறப்பட்டு சென்றார்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget