மேலும் அறிய
Advertisement
Madurai: மதுரையில் கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு வினாத்தாள் "லீக்"..! தேர்வர்கள் அதிர்ச்சி...
காலை 10 மணி முதல் 11மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. முதல் 30நிமிடம் தமிழ் திறனாய்வு தேர்வும், அடுத்த 30 நிமிடம் ஆங்கில திறனாய்வு தேர்வும் நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களில் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களுக்களை நிரப்புவதற்கான தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத் தேர்வு நடைபெறுகிறது.
— arunchinna (@arunreporter92) December 4, 2022
Further reports to follow @abpnadu #madurai | @SRajaJourno pic.twitter.com/ZsnoR77pKh
இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத்தேர்வு நடைபெறவுள்ளது.
காலை 10மணி முதல் 11மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. முதல் 30 நிமிடம் தமிழ் திறனாய்வு தேர்வும், அடுத்த 30 நிமிடம் ஆங்கில திறனாய்வு தேர்வும் நடைபெற்றது. இதில் விண்ணப்பத்திருந்த ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் தேர்வு எழுத காத்திருந்த நிலையில் திடீரென நள்ளிரவில் கிராம உதவியாளர் தேர்விற்காக மதுரை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையத்தில் உள்ள ஆங்கில திறனறிவுத்தேர்வுக்கான வினாத்தாள்களை சிலர் சமூகவலைதளங்களின் மூலமாக அனுப்பியதோடு விடைத்தாள்களை பெற 10 ஆயிரம் ரூபாய் கேட்டும் அனுப்படுவதாக கூறி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டு தேர்வின்போது வேறு வினாத்தாள்களை வழங்கி அதன் மூலமாக தேர்வு நடத்தவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai ; ”போய் வா தம்பி” - வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் ஹரிவைரவனுக்கு நடிகர் சூரி இரங்கல் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion