திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்: 65.63% வாக்குகள் பதிவு!
திண்டுக்கலில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆண்கள் மற்றும் பெண்கள் மொத்தம் 21,021 பேர் என 65.63% சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள வாக்காளர்கள் 898, திண்டுக்கல் பகுதியில் உள்ள வாக்காளர்கள் 2294, வத்தலகுண்டு பகுதியில் உள்ள வாக்காளர்கள் 901, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள வாக்காளர்கள் 4268, வேடசந்தூர் பகுதியில் உள்ள வாக்காளர்கள் 218, குஜிலியம்பாறை பகுதியில் உள்ள வாக்காளர்கள் 514, பழனி பகுதியில் உள்ள வாக்காளர்கள் 5459, கொடைக்கானல் பகுதியில் வாக்காளர்கள் 12260, நிலக்கோட்டை பகுதியில் உள்ள வாக்காளர்கள் 5216 ஆக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 32028 இருந்த நிலையில்,
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி 28 பதவிகளில் 15 பேர் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 13 பதவிகளுக்கான வாக்குபதிவு நடந்தது. அதன்படி நிலக்கோட்டை, பழனி, ஆகிய பகுதிகளில் 13 மற்றும் 14 வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவி மற்றும் கொடைக்கானல், வில்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆகிய நான்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஆத்தூர் அக்கரைப்பட்டி வீரக்கல், வத்தலகுண்டு, செக்காபட்டி, கணவாய்ப்பட்டி, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி, கூடலூர், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், விருதலைபட்டி ஆகிய பகுதிகளிலுள்ள 13-வார்டு உறுப்பினர்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடந்தது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முகக்கவசம், உடல் வெப்பநிலை, பரிசோதனை செய்த பின்னரே வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த வாக்குபதிவுக்கான தேர்தல் முடிவுகள் 12-ஆம் தேதி 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு திண்டுக்கல் மாவட்டத்தில் 57 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
இதற்கிடையே திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற 9 மற்றும் 15 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு சின்னம் பதிவிடும் கட்டை சரியாக பதிவிட முடியாத காரணத்தினாலும் வாக்குப் பெட்டி சரிவர மூடாத காரணத்தினாலும் வாக்குபதிவு ஆரம்பமான சுமார் 20 நிமிடம் தாமதமாக வாக்குபதிவு தொடங்கியது.
ஆத்தூர் ,திண்டுக்கல், வத்தலக்குண்டு ,ஒட்டன்சத்திரம் ,வேடசந்தூர், குஜிலியம்பாறை , பழனி ,கொடைக்கானல் ,நிலக்கோட்டை என ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த பகுதிகளில் மொத்தமாக 65.63 % வாக்குபதிவானது. ஆண்கள் 10454 பேர்களும் , பெண்கள் 10567 பேர்களும் என மொத்தம் 21,021 பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,