(Source: Poll of Polls)
''உள் அர்த்தம் புரிந்தது.. தூக்கம் வரவில்லை''.. திடீரென பாஜக எதிர்ப்பு - சரவணன் விளக்கம்!
”தி.மு.க., என்னுடைய தாய் கழகம் தான். ஆனால் பி.ஜே.பி.,யில் இருக்க மாட்டேன். மத அரசியலை விரும்ப மாட்டேன். அனைவருக்கும் பொதுவான மருத்துவராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்”
"நம்முடைய ராணுவ வீரர், நாட்டுக்காக உயிர் நீத்த தம்பி லெட்சுமணனின் பூத உடலுக்கு வீரவணக்கம் செலுத்த எல்லோரையும் போல பி.ஜே.பி.,யினரும் விமான நிலையத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு வந்த நிதி அமைச்சர் “என்ன தகுதியின் அடிப்படையில் வந்தீர்கள்” என கேட்டார். இதனை பர்சனலாக எடுத்துக்கொண்டோம். அதே சமயம் நானும் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் போது விரும்பதகாத நிகழ்வு நடத்துவிட்டது. நான் வீட்டிற்கு சென்ற பின்பும் மன உருத்தலாக இருந்தது. பின்பு தெளிவுபெரும் போது தான் புரிந்தது. அமைச்சர் அவர்கள் வெளிநாட்டில் படித்ததால் அவர் பேசும் தமிழில் என்ன சொல்கிறார் என்றால் “என்ன தகுதி” என்று கேட்ட புரோட்டோக்காலை குறிப்பிட்டுள்ளார். அரசு உடலை ரிசீவ் செய்து, ராணுவ வீரரின் கிராமத்திற்கு அனுப்புகிறது. அதனால் தனிப்பட்ட நபர்கள் விமான நிலையத்திற்கு வெளியிலோ, ராணுவ வீரரின் கிராமத்திலோ மரியாதை செய்யலாம் என்ற அடிப்படையில் சொல்லியுள்ளார்.
ஆனால் அதனை நான் உட்பட பி.ஜே.பி., தொண்டர்கள் அனைவரும் தனி மனித தாக்குதலாக எடுத்துக்கொண்டோம். ஆராய்ந்து பார்க்கும் போது தான் அதன் உள்அர்த்தம் புரிந்தது. சுயமரியாதை இயக்கமான திராவிட குடும்பத்தில் இருந்து வந்த நான், ஒரு வருடத்திற்கு முன்பு தான் பி.ஜே.பி.,யிற்கு வந்தேன். பி.ஜே.பி.,யில் எப்போதுமே சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு இருந்து கொண்டே இருக்கும். இந்த மன உளைச்சலோடு தான் கடந்த ஒருவட காலமாக பி.ஜே.பி.யில் பயணம் செய்துகொண்டிருக்கிறேன். இதனை அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளேன்.
சுய மரியாதை இயக்கத்தின் வழிவந்த நான் மத அரசியல் செய்யும் பி.ஜே.பி.,யில் இருக்க விரும்பவில்லை.
— Arunchinna (@iamarunchinna) August 14, 2022
- பி.ஜே.பி., மாவட்ட தலைவர் சரவணன் இரவில் திடீர் முடிவு !@ptrmadurai | @johnraja303 | @TRBRajaa | @SRajaJourno | @annamalai_k pic.twitter.com/ZBzMQhxPxR
இந்த சூழலில் அமைச்சரின் மீது தாக்குதலை ஏற்படுத்திய மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நினைத்து தூக்கம் வரவில்லை. அமைச்சர் பி.டி.ஆர்., தியாகராஜன் அவர்களது வீட்டிற்கு அடிக்கடி, வந்துள்ளேன். இதுவும் ஒரு தாய் வீடு போல தான். அதனால் அமைச்சரை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டு சந்தித்தேன். அவரிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். ஏற்கனவே கார்கில் போரில் நடைபெற்ற சம்பவத்திற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளேன். அப்போது நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். தற்போது நான் மருத்துவராகவும், மாவட்ட தலைவராகவும் இருந்தாலும் பொது ஜனம் தான். எனவே அந்த இடத்தில் இருந்திருக்க கூடாது. இருந்த போதிலும் மாநில தலைவர் அண்ணாமலை, புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன், நான் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினோம். ஆனால் தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து கசப்பான சம்பவம் நடைபெற்றுவிட்டது. இது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அமைச்சரிடம் இது குறித்து விளக்கத்தை அளித்துள்ளேன். இதனை அமைச்சர் கேசுவலாக எடுத்துகொண்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவன். இந்த சூழலில் துவேசமான அரசியலை செய்ய நானும் ஒரு ஆளாக இருந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அமைச்சரை சந்திதேன். தற்போது மைண்ட் ப்ரீயாக உள்ளது. இனி நிம்மதியாக தூங்குவேன்”
தி.மு.க., அமைச்சரை சந்திப்பதால் பி.ஜே.பி.,யில் பதவி போகாதா ?
”நான் அமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்கவரவில்லை. மன்னிப்பு கேட்பதற்காக தான் வந்தேன். எனக்கு கட்சி பதவியைவிட மன அமைதிதான் முக்கியம். அதனால் தான் அமைச்சரை சந்தித்தேன். இனி பி.ஜே.பியில் தொடர மாட்டேன். இந்த மத அரசியல், வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை. பி.ஜே.பி.,யில் தொடரப் போவதில்லை.
தி.மு.க.,வில் மீண்டும் இணைவீர்களா?
”தி.மு.க.,வில் இணைவது குறித்து தற்போது யோசிக்கவில்லை. இணைந்தாலும் தப்பில்லை. தி.மு.க., என்னுடைய தாய் கழகம் தான். ஆனால் பி.ஜே.பி.,யில் இருக்க மாட்டேன். மத அரசியலை விரும்ப மாட்டேன். அனைவருக்கும் பொதுவான மருத்துவராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்”
மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர்.P. சரவணன் Ex.MLA அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
— Arunchinna (@iamarunchinna) August 14, 2022
- என @annamalai_k அறிக்கை வெளியிட்டுள்ளார். pic.twitter.com/wMMPEVdHcz
இந்நிலையில் பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை டாக்டர் சரவணன் நீக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ராணுவ வீரரின் உடல் 21குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் - ஏராளமானோர் அஞ்சலி