பதவியை நான் ராஜினாமா செய்கிறேன், எடப்பாடி ராஜினாமா செய்ய தயாரா..? - ஓபிஎஸ் சவால்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசனை. பதவியை நான் ராஜினாமா செய்கிறேன், எடப்பாடி ராஜினாமா செய்ய தயாரா? ஓ.பன்னீர்செல்வம் சவால்..!
"பதவியை நான் ராஜினாமா செய்கிறேன், எடப்பாடி ராஜினாமா செய்ய தயாரா?" என்று மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் சவால் விட்டு பேசினார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீப காலமாக ஓபிஎஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் இன் பண்ணை வீட்டில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
'பண்பற்ற மனிதராக மோடியை நினைத்தேன்...ஆனால்...' மனம் உருகிய குலாம் நபி ஆசாத்
இதனைத் தொடர்ந்து நேற்று மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் இன் பண்ணை வீட்டிற்கு வந்து அவருக்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனை அடுத்து தன்னை சந்திக்க வந்த ஆதரவாளர்களிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கவுரமான பொது குழுவில் சி.வி சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல். எடப்பாடிக்கு வரவேற்பு கொடுக்கபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி தன்னை பொதுகுழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்யப்பட்டது.
JIO 5G Launch : தீபாவளிக்கு வரும் ஜியோ 5G.. அம்பானி சரவெடி அறிவிப்பு
அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமியின் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு. அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வர முடியும்,பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன். ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன்.

நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது. நான் பேசினால் யாரும் பேச முடியாது. 13 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தான் முதல்வராக ஆக்கினார். எடப்பாடி ராஜினாமா செய்யட்டும். நானும் ராஜினாமா செய்கிறேன். கீழே போய் தொண்டர்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும்பதவி ஆசை இல்லாத தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள். அதற்கு தொண்டர்கள் முடிவு பண்ணட்டும” எனப் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















