மேலும் அறிய

பழனி கோயில் 100 கோடி நில மோசடி: 'குற்றவாளிகளை உடனே கைது செய்!' - சிபிஎம் ஆவேசம்

பழனியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து சிபிஎம் சார்பில் பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பழனியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து சிபிஎம் சார்பில் பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், இந்த நில மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளையும் போலி ஆவணம் தயாரித்தவர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.

பழனி கோயில் 100 கோடி நில மோசடி: 'குற்றவாளிகளை உடனே கைது செய்!' - சிபிஎம் ஆவேசம்

​​திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், பழனி கோயில் நிலம் மோசடி செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது என்றார்.

​இந்த 100 கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் சென்றதும், கொடைக்கானலில் இருந்து மாற்று அதிகாரி வந்து ஒரே நாளில் வெள்ளத்துறை, சேதுபதி ஆகிய இருவருக்குப் பத்திரப் பதிவு முடித்துக் கொடுத்ததும் எப்படி என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

மேலும், நிலத்தை வாங்கியவர்கள் கொடுத்ததாகக் கூறப்படும் இரண்டு கோடி ரூபாய்க்கான செக் (Cheque) போலி ஆவணமா, வங்கியில் பணம் இருக்கிறதா என்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றார். தவெக அரசு உடனடியாக தலையிட்டுப் பத்திரப் பதிவை ரத்து செய்ததும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதும் நல்ல நடவடிக்கை என்றாலும், இது 'அறியாமல் நடந்த தவறு' என்று அமைச்சர் கூறுவது உண்மையை மறைக்கும் செயலோ என்ற பொதுமக்களின் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளது என்றார். 

பழனி கோயில் 100 கோடி நில மோசடி: 'குற்றவாளிகளை உடனே கைது செய்!' - சிபிஎம் ஆவேசம்

எனவே, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குற்றவாளிகள் மற்றும் சார்பதிவாளர் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் சிபிஎம் தயங்காது என்றார்.

​தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள சட்டத்திருத்தம் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்றும், தேசவிரோதச் செயலாகும் என்றும் சாடினார். கரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜீரோ வேல்யூ தடை உத்தரவை ரத்து செய்த தவெக அரசைப் பாராட்டிய அவர், லஞ்ச ஊழலை ஒழிப்பதாகக் கூறும் தமிழக முதலமைச்சர் விஜய் தனது அறிவிப்புகளை வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல் உறுதியோடு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மேலும், தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன் மீதான காவல்துறையின் விசாரணை மற்றும் செல்போன் பறிப்பு நடவடிக்கை அராஜகத்தின் உச்சம் எனக் கூறி அதற்குத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget