மேலும் அறிய

"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தான் ரவுடிக்கு ரவுடி என்று பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர்.

திமுக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகிய நிலையில், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது, 

திட்டமிட்டு கொள்ளையா?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து வருவார். வரும்போது ஒரு கேள்வி கேட்பாரு. நீ பதில் சொல்ல முடியுமா? இவன் பெரிய யோக்கியனா? கை கறை இல்லாததாம். இன்னைக்கு மணல் எல்லாம் ஏலம் விட விட்ருக்கான். யாருக்கு விட்ருக்கான்?

இந்த ரெட்டிக்கு கொடுத்துட்டாங்க, சேகர் ரெட்டிக்கு கொடுத்துட்டாங்க. இவருக்கு கொடுத்துட்டாங்க, அவருக்கு கொடுத்துட்டாங்கனு. எப்படி கொடுக்கிறாய்? எந்த வகையில் கொடுக்கிறாய்? பணத்தை கொள்ளையடிப்பதில் திட்டமிட்டு கொள்ளையடிக்கிறீர்களா?

ரவுடிக்கு ரவுடி:

திமுக மற்றும் அதிமுக-வை இன்று ஏதோ தப்பு செய்தது போல சொல்றீங்க? இன்று உன் கதை என்ன? மின்துறை அமைச்சரின் மனைவி தாம்பரத்தில் ஆசிரியையாக வேலை செய்தார். கலந்தாய்வு இருந்தால் ஆசிரியையாக மாற்றுவார். அவருடைய மனைவியை திருவல்லிக்கேணிக்கு மாற்றிக் கொண்டு வந்துள்ளார். அதிகார துஷ்பிரயோகமா?

அவர் சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடியாம். எத்தனை பேரை வெட்டியிருக்கிறேன்? எத்தனை பேரை கொலை பண்ணியிருக்கிறேன்? 16 வயதில் இருந்து நான் தொழில் செய்கிறேன். எந்த கடுமையான வார்த்தைகளும் எவரையும் பேசியதில்லை. ஆனால், மின்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடி என்கிறார். ஆம். நான் ரவுடிக்கு ரவுடிதான். எங்களைத் தொட்டுப்பார்க்க முடியாது. நீ உசிலம்பட்டியில் இருக்கலாம். எங்கும் இருக்கலாம். ஆனால், நடக்காது தம்பி.

இவ்வாறு அவர் பேசினார்.

அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசிய காரணத்திற்காக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் தான் ரவுடிக்கு ரவுடி என்று பேசியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

மேலும், அவர் பேசும்போது ஆட்சி உங்களுக்கு நிரந்தரமா? நாங்கள் கூப்பிட வேண்டிய அவசியமில்லை என்றும், தானாக வந்துவிடுவான், 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்றும், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவது உறுதி என்றும் பேசினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வடகிழக்கு பருவமழை தொடக்கம்! புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை தொடக்கம்! புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Embed widget