மேலும் அறிய

DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை விமர்சிக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் திமுக எம்பி-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மொத்த கூட்டணியும் மாறியுள்ளது. தேர்தலுக்கு முன்பு பலமிகுந்த கூட்டணியாக இருந்த திமுக இன்று தனி அணியாக உள்ளது. அவர்களுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தவெக ஆட்சி அமைய பக்கபலமாக மாறியுள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை:

திமுக கூட்டணியில் தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் கொண்ட கட்சியினர் மட்டுமே ஆதரவு அளித்து வருகின்றனர். தேசிய அளவில் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வந்த திமுக, தற்போது யாருடனும் கூட்டணி இல்லாமல் உள்ளது. 

இந்த சூழலில், லண்டன் சென்ற முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடியே காணொளி காட்சி மூலமாக திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின்போது நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

பாஜக-வையும், மோடியையும் விமர்சிக்காதீர்கள்:

அப்போது, எம்பி-க்களுக்கு அறிவுரை வழங்கிய மு.க.ஸ்டாலின் காங்கிரசுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதேசமயம், பாஜக-வையும், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர்களையும் விமர்சிக்க வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய கட்சியுடன் கூட்டணி என்பது மாநில நலன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்காக ஒரு மாநில கட்சிக்கு அவசியமாக உள்ளது. தற்போதுள்ள சூழலில், காங்கிரஸ் தவெக பக்கம் தாவியுள்ள நிலையில், பாஜக-வுடன் இணக்கமான போக்கை திமுக கையில் எடுத்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக- திமுக கூட்டணியா?

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரவையில் திமுக எம்பி-க்கள் விரைவில் இடம்பிடிக்க உள்ளனர் என்று அவர் பேசினார். அப்போது, பாஜக-வுடன் திமுக கூட்டணி வைக்கிறதா? என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்பட்டது. மேலும், விசிக தலைவர் திருமாவளவனும் பாஜக-வுடன் திமுக கூட்டணி வைக்கும் என்று கணித்துப் பேசியிருந்தார். 

இந்த சூழலில், தனது கட்சி நிர்வாகிகளுக்கும், எம்பி-க்களுக்கும் ஆலோசனை வழங்கிய மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர்களையும் விமர்சிக்க வேண்டாம் என்று பேசியிருப்பது திமுக - பாஜக கூட்டணி அமைக்கிறதா? என்ற கேள்வியை இன்னும் வலுவாக்கியிருப்பது.

தீர்மானிக்கப்போகும் தொகுதி மறுவரையறை மசோதா:

நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதால் தேர்தல் கூட்டணிக்கு திமுக-வும் அவசரம் காட்டாமல் நிதானமாக இருக்கிறது. அதேசமயம், காங்கிரஸ் தவெ பக்கம் சென்றுவிட்டதால் திமுக பாஜக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பலரும் கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். 

தொகுதி மறுவரையை சீரமைப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள வாக்கெடுப்பை திமுக புறக்கணித்தாலே அது பாஜக-விற்கான கூட்டணிக்கான அச்சாரம் என்றே கருதிகொள்ளலாம் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget