மதுரையில் பெய்த ஆலங்கட்டி மழை....திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை; காற்றில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது: மரத்தைப் போராடி அகற்றிய தீயணைப்புத் துறையினர்.
மதுரை புறநகர் பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டரித்த நிலையில் மாலை நேரத்தில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருநகர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மதுரை திருநகர் முதல் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாண்டியன் நகரில், இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான புதிய கார் மீது பெரிய ராட்சத மரம் சாய்ந்ததில் காரில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி கார் முழுமையாக சேதமாகாமல் மரத்தை வெட்டி மரத்துக்கு அடியில் சிக்கியிருந்த காரை அகற்றினர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி முப்பெரும் விழா மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்!
அதேபோல மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் திடீரென பெய்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை - பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாநகர் முழுவதிலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெறித்து வந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் திடீரென காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையானது பெய்தது . மதுரை கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், வள்ளுவர்காலனி, பசுமலை, பைக்கரா, அழகப்பன் நகர், பழங்காநத்தம், வசந்த நகர், ஆண்டாள்புரம் நேரு நகர் பைபாஸ் சாலை காளவாசல் குரு தியேட்டர் மாடக்குளம் , மாட்டுத்தாவணி கருப்பாயூரணி அண்ணாநகர் தெப்பக்குளம் கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி- மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
நியூசிலாந்தின் கெர்மடக் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆக பதிவு
இதேபோன்று பழங்காநத்தம் நிலையூர், கூத்தியார் குண்டு, நேரு நகர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆலங்கட்டி மழையை கையில் எடுத்து வைத்து விளையாடி மகிழ்ந்தனர். மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் மழை பெய்யும் என பக்தர்களின் நம்பிக்கையை நிருபிக்கும் வகையில் மதுரை மாநகர் முழுவதிலும் கனமழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்