மேலும் அறிய

திருப்பரங்குன்றம் விவகாரம்; கட்சிக்காரனாக கலந்துகொள்ளவில்லை - ஹெச்.ராஜா

வழக்குப்பதிவு என்பது பழிவாங்கும் நோக்கத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற  கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையில் நடந்த கூட்டத்தில், ‘நான் அரசியல் கட்சியை சார்ந்தவன் அல்ல; இந்துவாக கலந்துகொண்டேன், என் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை, மாட்டுத்தாவணி தோரணவாயில் விபத்து என்பது இந்த அரசு எதையும் முறையாக செய்வதில்லை என்பதற்கு உதாரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
 
ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கட்டுப்பாடுகளை மீறி பேசியதாக ஹெச்.ராஜா மீது  BNS 192,196 (1ab),352,353(1ab) போன்ற பிரிவுகளில் கலவரத்தை ஏற்படுத்துதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதியை குந்தகம் விளைவித்தல், ஒரு பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் போன்ற பிரிவுகளின் கீழ் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹெச்.ராஜாவிற்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்திற்கு அவரது வழக்கறிஞர்களுடன் வருகைதந்தார். அப்போது காவல்நிலையத்தின் முன்பாக ஏராளமான பாஜகவினரும் வருகை தந்தனர். இதனால் காவல்நிலையத்தின் முன்பாக 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். பின்னர் ஹெச்.ராஜா காவல்நிலையத்திற்குள் வழக்கறிஞர்களுடன் சென்றபோது தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலைந்துசென்றனர்.
 
பணிகளை சரியாக செய்வதில்லை

இதையடுத்து ஒரு மணி நேரமாக ஹெச்.ராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்னர் காவல்நிலையத்தில் இருந்து வெளியில் வந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள் அது தொடர்பாக நேரில் வந்து உரிய விளக்கத்தை அளித்திருக்கிறேன். மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பகுதியில் தோரண வாயில் இடிப்பு பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்து ஒருவர் சிகிச்சையில் உள்ளார். இது போன்ற பணிகளை இந்த அரசு சரியாக செய்வதில்லை என்பதற்கு இது உதராணம்” என்றார்.
 
உங்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்பது குறித்த கேள்விக்கு? 
 
என் மீது இதுவரை எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என தெரிவித்தார்
 
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு?
 
நான் கூட்டத்தில் கலந்துகொண்டது அரசியல் கட்சித் தலைவராக பங்கேற்கவில்லை. ஒரு இந்துவாக கலந்து கொண்டேன் என தெரிவித்தார் 
 
வழக்குப்பதிவு என்பது பழிவாங்கும் நோக்கத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற  கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றார்.
 
தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget