திண்டுக்கல்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பண்ணைப்பட்டி அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட மூவர் பலி. 6 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பண்ணைப்பட்டி அருகே உள்ள செம்பட்டி ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கேரள திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பழனிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். காரை கேரள மாநிலம் கரமணையை சேர்ந்த கண்ணன் என்பவர் ஒட்டி வந்தார். காரில் அபிஜித் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
கார் T.பண்ணைப்பட்டி அருகே வரும் போது காரின் டயர் வெடித்ததில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரை தாண்டி சென்று எதிரே பழனியில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
மேலும் 7 பேர் பேர் பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உதவியுடன் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தது. விபத்து குறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலகுண்டு அருகே செயினை பறித்த கொள்ளையர்களை துடைப்பதால் அடித்து விரட்டி பிடிக்க முயன்ற மூதாட்டி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த கோட்டை என்பவர் மனைவி முருகாயம்மாள் 75 வயதை கடந்த இவர் காலை வீட்டின் முன்பு வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார் அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் முருகாயம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மூதாட்டியிடம் வழிப்பறி கொள்ளையர்கள் செயினை பறிக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது மூதாட்டி வாசலை துடைப்பத்தால் பெருக்கிக் கொண்டிருக்கும் போது நோட்டமிடும் கொள்ளையர்கள் வீதியில் யாரும் இல்லாததை அறிந்து திடீரென மூதாட்டியின் அருகே வந்து அவர் திரும்பி இருந்த நேரம் பார்த்து கழுத்தில் இருந்த செயினை பறித்தனர் திடுக்கிட்ட மூதாட்டி நிலை தடுமாறாமல் கையில் இருந்த துடப்பத்தை கொண்டு செயினை பறித்த கொள்ளையனை அடிக்க தொடங்குகிறார்.
அடி வாங்கிய கொள்ளையர்கள் வேகமாக வண்டி எடுத்து தப்பியோட மூதாட்டி அவர்களை துடைப்பத்தோடு விரட்டும் பரபரப்பான காட்சிகள் பதிவாகியுள்ளன தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சிசிடிவி காட்சி கொண்டு கொள்ளையர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்