மேலும் அறிய

டெல்லியில் போராடும் விவசாயிகளை யாரோ தூண்டிவிட்டு வருகிறார்கள் - ஜி.கே.வாசன்

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியுடன் இருந்த கட்சிகளோடு தமாகா தற்போது பேசி வருவது எந்த தவறும் கிடையாது. நட்பு ரிதியில் மட்டுமே நாங்கள் பேசி வருகிறோம் - ஜி.கே.வாசன்

திண்டுக்கல்லில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின இல்ல திருமண விழாவிற்கு வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை யாரோ தூண்டிவிட்டு வருகிறார்கள் - ஜி.கே.வாசன்

அப்போது அவர் கூறுகையில், "பாராளுமன்றத் தேர்தலையொட்டி தயார் நிலையில் இருக்கும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் களப்பணிக்கான ஆலோசனை நடைபெற்று முடிந்தது. கூட்டணி குறித்த கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்போது எந்த கூட்டணியுடன் நாங்கள் இருக்கிறோம் என்பது தெரியவரும். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியுடன் இருந்த கட்சிகளோடு நட்போடும் அன்போடும் நட்பு பாராட்டி தற்போது பேசி வருகிறோம். அதன் அடிப்படையிலேயே கட்சிகளோடும் கட்சித் தலைவர்களுடனும் வெற்றி தோல்விகள் குறித்தும் பேசி வருவதில் எந்த தவறும் கிடையாது. தமாகாவை பொறுத்தவரை தேர்தல் கூட்டணி என்றால் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி என பெயரெடுத்த கட்சி.

டெல்லியில் போராடும் விவசாயிகளை யாரோ தூண்டிவிட்டு வருகிறார்கள் - ஜி.கே.வாசன்

தமாகவின் பலமே நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படை தன்மை. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தமாக முக்கிய கட்சியாக இருக்கும் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்” என்றார். எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை சந்தித்ததாகவும் எனது கருத்துக்களை அவரிடம் தெரிவித்ததாகவும் இது தவிர தற்போதைக்கு எதுவும் கூற முடியாது. அப்படி கூறுவது தற்போது நன்றாக இருக்காது. அகில இந்திய அளவில் இந்திய கூட்டணியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கூட்டணி கட்சி குறித்து முடிவு செய்வது அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமே. வெற்றி வாய்ப்பை முடிவு செய்வது வாக்காளர்கள். வாக்காளர்கள் தான் எஜமானர்கள்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை யாரோ தூண்டிவிட்டு வருகிறார்கள் - ஜி.கே.வாசன்

தேர்தல் முடிவிலே வாக்குச்சீட்டுகள் எண்ணிய பிறகு வாக்காளர்களின் எண்ணங்கள் வெளிப்படும். அதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. சைக்கிள் சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையத்திடமும் உச்சநீதி மன்றத்திலும் எங்களது பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் கிடைக்கும் என இறைவனை வேண்டுகிறேன்.சட்டீஸ்கர் மாநிலத்தில் மேயர் தேர்தல் குறித்த கேள்விக்கு இந்திய நாட்டில் அனைத்து கட்சிகளும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அதில் மாற்று கருத்து கிடையாது. விவசாயிகள் போராட்டம் என்பது ஒருபுறம் நியமானது என்றாலும், மறுபுறம் அவர்களை யார் தூண்டிவிடுவது தேர்தல் அறிவிப்புக்கு 15 நாட்களுக்கு முன்பு ஏன் இந்த வேகம் ஏன் இந்த போராட்டம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

டெல்லியில் போராடும் விவசாயிகளை யாரோ தூண்டிவிட்டு வருகிறார்கள் - ஜி.கே.வாசன்

பாஜகவை பொறுத்தவரை விவசாயிகளை சார்ந்த கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. பல திட்டங்களை அவர்கள் விவசாயிகளுக்கு கொடுத்திருப்பதை நான் இங்கு குறிப்பிட முடியும்.  இவ்வளவு காலம் கழித்து தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சில கட்சிகள் தங்களது தேர்தல் தோல்வியின் பயத்தின் காரணமாகவே சில விவசாயி பிரதிநிதிகளை தூண்டி இந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பது நல்லதல்ல. இதை முறையாக மத்திய அரசு கையாளும் என நான் நம்புகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget