கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் செங்கோல் குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். ஆனால் மேயர் செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் செங்கோல் குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். ஆனால் மேயர் செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டார் என பழனியில் இந்து வியாபாரிகள் நல சங்கம் மாநில அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இதனை தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
இந்து வியாபாரிகள் நலச்சங்க அலுவலக திறப்பு விழா பழனியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பழனி கிரிவலப்பாதையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர். இதற்கு இந்து முன்னணி மகிழ்ச்சி தெரிவிக்கிறது. ஆனால் கிரிவலப்பாதையில் வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கு அரசு உரிய வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்து முன்னணி சார்பில், வியாபாரிகள், பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் செங்கோல் குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். ஆனால் மேயர் செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டார். பிரதமர் மோடி என்ன சொல்கிறாரோ, அதற்கு எதிராக தான் ராகுல்காந்தி பேசுவது என்பது நிலைப்பாடு. ஒரு சமயம் நான் இந்து என்கிறார். மற்றொரு சமயம் இந்து இல்லை என்கிறார். எனவே அதை பற்றி பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. ஒருசமயம் நான் இந்து என்கிறார். ஒரு நடிகர் விஜய் திராவிட கலாசாரத்தோடுதான் அரசியலை கொண்டு போவார்.
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
குறிப்பாக மத்திய அரசை எதிர்ப்பது என்பது அவரது நிலைப்பாடு. அவ்வாறு எதிர்த்தால் அரசியலில் வளர முடியும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் இந்து முன்னணி நீட் தேர்வை ஆதரிக்கிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். இதில் அரசியல்வாதிகளின் தொடர்பு உள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் எப்போதுமே அவர்களுக்கு சாதமாக உள்ள நீதிபதிகளை தான் விசாரணைக்கு போடுகிறார்கள். உதாரணமாக சந்துரு என்பவரை நியமித்தார்கள். அவர் ஒரு நக்சலைட் சிந்தனை கொண்டவர். இவர் கயிறு கட்ட கூடாது, பொட்டு வைக்க கூடாது என்கிறார். ஆனால் அவர் சிலுவை, பர்தா போட்டு வரக்கூடாது என சொல்லியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.