மேலும் அறிய
Advertisement
Crime : ‘கேரள லாட்டரி டிக்கெட் வாங்குங்க..’ பேஸ்புக் மூலம் ஏமாற்றிவரும் மோசடி கும்பல்.. உஷார்
”லாட்டரியால் பணம் கிடைக்கும் என திசை மாற்றும் வகையில் பேசி வருவதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாக கேரளா லாட்டரி விற்பனை என்ற பெயரில் மோசடி தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. பேஸ்புக் மூலமாக கேரளா லாட்டரி எனக்கூறி தொலைபேசி எண்ணும் அதில் பதிவிட்டுள்ளது. அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் பொழுது 50 சீட்டுகள் 300 ரூபாய் எனவும் அதனை ஜிபே போன் பே போன்ற ஆன்லைன் பேமெண்ட் ஆக செலுத்தினால் மாலை நேரத்தில் குலுக்கல் நடைபெறும் எனவும் அதில் வாங்கப்பட்ட எண் வந்தால் 5 ஆயிரம் ரூபாய் பரிசாகவும் வழங்கப்படும் என கூறுகின்றனர். 300 ரூபாய் உடனடியாக ஜிபேயில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்
அந்த நபரிடம் கேட்டபோது பொழுது கேரளா லாட்டரி விற்பனை செய்வதாகும் மதுரை , சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதற்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும் கூறுகின்றார். தொடர்ச்சியாக தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களுக்கு விரைவாக பணத்தை செலுத்துமாறும் அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும் விரைவாக பணத்தை செலுத்துங்கள் என தொடர்ச்சியாக தொலைபேசியில் அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் புதிய புதிய எண்களில் இருந்து ஜிபே உள்ளிட்ட க்யூ ஆர் கோடுகளை அனுப்பி வைக்கின்றனர்
தொடர்ச்சியாக அவசர அவசரமாக பணத்தை செலுத்துமாறு தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களுக்கு போன் செய்து அழுத்தம் தருகின்றனர். அதனால் ஏராளமான பொதுமக்கள் இதனை நம்பி ஆன்லைன் லாட்டரி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக கேரள லாட்டரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளவாசிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நம்பிக்கை இல்லை என்றால் வீடியோ கால் மூலமாக பேசுமாறு நான் எனது ஆதாரை அனுப்பி வைக்கிறேன் எனவும் பேசுபவர்களை திசை மாற்றும் வகையில் பேசி வருவதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீ தூள் தயாரிப்பு - 2 பேர் கைது; 400 கிலோ டீ தூள் பறிமுதல்
மேலும் செய்திகள் படிக்க - மு.க அழகிரியை சந்தித்து சால்வை அணிவித்த நிதி அமைச்சரின் ஆதரவாளரால் பரபரப்பு - திமுகவில் மீண்டும் முக அழகிரியின் கை ஓங்குகிறதா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion