மேலும் அறிய

கேன் வாட்டர் குடிக்கிறவங்களா நீங்க? - அப்போ இத தவறாம படிங்க...!

பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரில் குறைபாடுகள்‌ குறித்து 9444042322 என்ற 'வாட்ஸ்‌அப்‌' எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல்‌ அனுப்பலாம்

பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள்‌ அதிக அளவில்‌ பயன்படுத்தும்‌ பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரின்‌ (Packaged Drinking Water) தரம்‌ குறித்து உணவு பாதுகாப்புத்‌ துறைக்கு பல்வேறு புகார்கள்‌ வரப்பெற்றுள்ளது. மேலும்‌, தரமற்ற குடிநீரை அருந்துவதால்‌ காலரா, டைபாய்டு, அமீபியாசிஸ்‌, வயிற்றுபோக்கு, E. coli தொற்று ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
 
உணவு பாதுகாப்பு மற்றும்‌ தரங்கள்‌ சட்டம்‌ - 2006 மற்றும்‌ 2.10.8 of FSS (Food Products Standards and Food Additives) Regulations, 2011 – படி பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரின்‌ (Packaged Drinking Water) தரம்‌ வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும்‌, பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரில் pH – 6 to 8.5, Total Dissolved Solids – 500 mg / litre, Turbidity – 2 NTU, Calcium – 20 to 75 mg / litre, Magnesium – 10 to 30 mg / litre, Sodium – 200 mg / litre, Chloride – 200 ml / litre Total Pesticide Residue – Not more than 0.005 mg / litre ஆகிய அளவுகளும் Coliform bacteria, Faecal Streptococci, Yeast and mould, Salmonella and Shigella, Vibrio Cholera ஆகிய நுண்கிருமிகள்‌ இல்லாமலும்‌ இருக்க வேண்டும்‌. மேற்படி பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரில் (Packaged Drinking Water) மேற்கூறிய தரங்கள்‌ குறைவாக இருப்பின்‌ உணவு பாதுகாப்பு மற்றும்‌ தரங்கள்‌ சட்டம்‌ - 2006-ன்‌ கீழ்‌ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌.
 
கேன் வாட்டர் குடிக்கிறவங்களா நீங்க? - அப்போ இத தவறாம படிங்க...!
 
பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) உற்பத்தி செய்யும்‌ அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும்‌ உணவு பாதுகாப்புத்‌ துறையின்‌ உரிமம்‌ மற்றும்‌ Bureau of Indian Standards (BIS)-ல்‌ வழங்கப்படும்‌ உரிமம்‌ ஆகியவை கட்டாயம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) தயாரிப்பு நிறுவனங்களில்‌ ஆரம்பம்‌ முதல்‌ இறுதி நிலை வரை உணவு பாதுகாப்பு மற்றும்‌ தரங்கள்‌ சட்டம்‌ - 2006 மற்றும்‌ ஒழுங்குமுறைகள்‌ - 2011-ல்‌ குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்‌.
 
கேன் வாட்டர் குடிக்கிறவங்களா நீங்க? - அப்போ இத தவறாம படிங்க...!
 
குறிப்பாக 20 லிட்டர்‌ கேன்களில்‌ லேபிள்கள்‌ தெளிவாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும்‌, ஒவ்வொரு முறையும்‌ குடிநீர்‌ நிரப்பும்‌ முன்பு கேன்கள்‌ நன்கு கழுவி சுத்தம்‌ செய்யப்பட வேண்டும்‌. பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) உற்பத்தியின்‌ போது அதன்‌ தரம்‌ குறித்து ஆய்வு செய்த பின்பே நுகர்வோர்‌ பயன்பாட்டிற்கு விநியோகம்‌ செய்ய வேண்டும்‌. உணவு பாதுகாப்பு சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்குமுறைகள்‌ விதிகளின்‌ படி கேன்களின்‌ மீதுள்ள லேபிள்களில்‌ உணவு பாதுகாப்பு துறையின்‌ உரிம எண்‌, BIS-ஆல்‌ வழங்கப்பட்ட உரிம எண்‌, தயாரிப்பு நிறுவனத்தின்‌ பெயர்‌ மற்றும்‌ முழுமையான முகவரி, நிகர எடை, லாட்‌ / கோடு / பேட்ஜ்‌ எண்‌, தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு உள்ளிட்ட விபரங்கள்‌ இடம்‌ பெற வேண்டும்‌. பொதுமக்கள்‌ பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரை (Packaged Drinking Water) கடைகளில்‌ வாங்கும்‌ பொழுது மேற்குறிப்பிட்ட விபரங்கள்‌ உள்ளதா? என சரி பார்த்து வாங்க வேண்டும்‌.

கேன் வாட்டர் குடிக்கிறவங்களா நீங்க? - அப்போ இத தவறாம படிங்க...!
 
உணவு பாதுகாப்புத்‌ துறையின்‌ மூலம்‌ தயாரிப்பு நிறுவனங்கள்‌ மற்றும்‌ அனைத்து விற்பனை நிலையங்களிலிருந்து பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) 1640 மாதிரிகள்‌ எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டதில்‌ 694 மாதிரிகள்‌ தரமானது எனவும்‌, 527 மாதிரிகள்‌ பாதுகாப்பற்றது எனவும்‌, 419 மாதிரிகள்‌ தரம்‌ குறைவானது / தப்புக்குறியிடப்பட்டது எனவும்‌ அறிக்கை பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பற்றது என அறிக்கை பெறப்பட்ட பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) உற்பத்தி செய்த தயாரிப்பாளர்கள்‌ மற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மீது உணவு பாதுகாப்பு மற்றும்‌ தரங்கள்‌ சட்டம்‌-2006-ன்‌ படி குற்றவியல்‌ நீதித்துறை நடுவர்‌ நீதிமன்றத்தில்‌ 173 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டதில்‌ 74 வழக்குகளில்‌ தீர்ப்பு வழங்கப்பட்டு 12.84 லட்சம்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது.
 
தரம்‌ குறைவானது / தப்புக்குறியிடப்பட்டது என அறிக்கை பெறப்பட்ட பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரை (Packaged Drinking Water) உற்பத்தி செய்த தயாரிப்பாளர்கள்‌ மற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மீது Adjudication Officer - நீதிமன்றத்தில்‌ 334 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டதில்‌ 227 வழக்குகளில்‌ தீர்ப்பு வழங்கப்பட்டு 39.69 இலட்சம்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீரை (Packaged Drinking Water) உற்பத்தி செய்யும்‌ தயாரிப்பு நிறுவனங்கள்‌ மற்றும்‌ அனைத்து விற்பனை நிலையங்களிலும்‌ உணவு பாதுகாப்புத்‌ துறையின்‌ மூலம்‌ தொடர்‌ ஆய்வுகள்‌ மற்றும்‌ கண்காணிப்புகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
பாட்டில்களில்‌ அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) மற்றும்‌ உணவுப்‌ பொருட்களில்‌ உள்ள குறைபாடுகள்‌ குறித்து 9444042322 என்ற 'வாட்ஸ்‌அப்‌' எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல்‌ மூலம்‌ உணவு பாதுகாப்புத்‌ துறைக்கு புகார்‌ அளிக்கலாம்‌" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
Embed widget