ஆந்திராவில் இருந்து தேனி வழியாக கடத்தல் முயற்சி : 123 கிலோ கஞ்சா பறிமுதல்.. 5 பேர் கைது..
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் என்றும், இதே கஞ்சா கேரளாவுக்கு கொண்டு சென்றால் அதன் மதிப்பு ரூபாய் 55 லட்சத்து 35 ஆயிரம் என்ற அளவுக்கு விற்பனையாகும் என்றும் கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் குறுக்கு காட்டுப்பாதையான மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா கடத்தும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு ஆய்வாளர் டி.விஜய் ஆனந்த் தலைமையில் மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது சாக்குமூடைகள் மற்றும் மோட்டார் பைக்குடன் நின்றிருந்த 5 நபர்களை விசாரித்து, அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடைகளை சோதனை செய்ததில் 123 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரிடமும் விசாரணை செய்தனர். விசாரணையில் கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்த அன்பு, சஞ்சய்குமார், சென்னை செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், சுப்பிரமணி மற்றும் கஞ்சா கடத்தி வந்தவர்களுள் 17 வயது சிறுவன் ஒருவன் என்பதும் தெரியவந்தது.
தேனியில் கெடு முடிந்தும் பிடி கொடுக்காத திமுக சேர்மன் - வேதனையில் காங்கிரஸ் நிர்வாகிகள்
ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னை வழியாக கம்பம் நகருக்கு கொண்டு வந்து, இங்கு பதுக்கி வைத்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் இருந்து 123 கிலோ கஞ்சா, மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் என்றும், இதே கஞ்சா கேரளாவுக்கு கொண்டு சென்றால் அதன் மதிப்பு ரூபாய் 55 லட்சத்து 35 ஆயிரம் என்ற அளவுக்கு விற்பனையாகும் என்றும் கூறப்படுகிறது.
மறக்க முடியுமா? குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 23 உயிர்கள் பறிபோன தினம் இன்று ...!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்