விளம்பர நோக்கத்திற்காகவே இதுபோன்ற வழக்குகள் தாக்கல் - சோலார் எனர்ஜி நிறுவனம் மீதான வழக்கில் நீதிபதிகள் கருத்து
சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா சோலார் எனர்ஜி என்கிற தனியார் நிறுவனம் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்

இதனால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள கால்நடை மேய்ச்சல் மற்றும் விவசாய பணிகளுக்கு உள்ள நீர் பிடிப்பு ஊரணியையும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். எனவே தனியார் சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நீர் பிடிப்புகளை மீட்டுத்தரக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, "இதுபோன்ற வழக்குகள் விளம்பர நோக்கத்திற்காகவே தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

