மேலும் அறிய

ஈரோடு - பழனி, மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு - ரயில்வே அமைச்சர்

ஈரோடு - பழனி, மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூபாய் 100 கோடியும் அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூபாய் 100.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

மத்திய ரயில்வே அமைச்சர் 

பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விளக்கங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அவர் பேசும் போது," தெற்கு ரயில்வேக்கு தமிழக  திட்டங்களுக்காக ரூபாய் 6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே எல்லைக்குட்பட்ட கேரள மாநிலத்திற்கு ரயில்வே திட்டங்களுக்காக ரூபாய் 3,011 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த மிக மோசமான அரசு இதுதான்.! ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்த எம்பி தயாநிதிமாறன்.!

மதுரை கோட்டம்

அதில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு - பழனி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூபாய் 100 கோடியும் அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூபாய் 100.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு 2759 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் மாநில அரசிடமிருந்து 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே பெறப்பட்டுள்ளது.  தேவையான நிலம் இல்லாமல் பல்வேறு ரயில் பாதை திட்டங்கள் கைவிடப்படும் நிலையில் உள்ளன.

அமிர்த பாரத் ரயில் நிலையம்

அம்பாசமுத்திரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, மதுரை, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய ரயில்வே நிலையங்களை நவீன வசதிகளுடன் அமிர்த பாரத் ரயில் நிலையங்களாக மேம்படுத்தவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே சட்டம் மற்றும் பணிநேர ஒழுங்குமுறை விதிகளின்படி லோகோ பைலட்டுகள் வாரத்திற்கு 54 மணி நேரம் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது அவர்கள் 52 மணி நேரம் பணியாற்றும் சூழல் உள்ளது. இந்த 52 மணி நேரத்தில் 48 மணி நேரம் நேரடி பணியும் 4 மணி நேரம் பணிக்கு தயாராகும் காலமாகவும் கணக்கிடப்ப்படுகிறது.

16  மணி நேரம் ஓய்வு வழங்கப்படுகிறது

அதே போல லோகோ பைலட்டுகள் பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் போது பணி நேரத்துடன் கூடுதலாக ஒரு மணி நேரம் சேர்த்து ஓய்வு வழங்கப்படுகிறது. மீண்டும் அவர்கள் தலைமையகத்துக்கு திரும்பும் போது 16  மணி நேரம் ஓய்வு வழங்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு 15 நாட்களுக்கும் கால முறை ஓய்வு வழங்குவதும் உறுதி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 558 ஓடும் தொழிலாளர்  ஓய்வு அறைகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளன. 7000 ரயில் என்ஜின்களுக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. லோகோ பைலட்டுகளுக்கான அடிப்படை வசதிகளோடு புதிய ரயில் என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rail Coach Restaurant: இதோ... திண்டுக்கல்லில் வரப் போகிறது ரயில் பெட்டி உணவகம் - பயணிகளுக்கு வரப்பிரசாதம்

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget