மேலும் அறிய
Madurai: “ஆளும்கட்சிக்கு நாளைக்கு இருக்கிறது, நாளை கிழித்து தொங்கவிடுவேன்” - எஸ்.ஜி.சூர்யா மிரட்டலால் பரபரப்பு
30 நாட்கள் நாள்தோறும் காலை 10 மணிக்கு மதுரை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு.
”ஆளும்கட்சிக்கு நாளைக்கு இருக்கிறது, நாளை கிழித்து தொங்கவிடுவேன்” என அவதூறு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நீதிமன்றம் வளாகத்தில் வாகனத்தில் ஏறியபோது எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் கடந்த 7ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி, கடந்த 12ஆம் தேதியன்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர சைபர்கிரைம் காவல்துறையினர் சென்னையில் வைத்து பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை 16-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் எஸ்.ஜி. சூர்யாவை காவல்துறை விசாரணை கோரிய வழக்கில் நேற்று மதியம் மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் நீதிபதி டீலா பானு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். சைபர் கிரைம் காவல்துறை சார்பில் சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய வழக்கின் இடையே சூர்யாவிற்கு ஜாமின் அளிக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குறுக்கீட்டு வாதம் செய்யப்பட்ட போது சூர்யாவின் பதிவு இரு சமூகத்தினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவித்து சூர்யாவிற்கு ஜாமின் வழங்க கூடாது எனவும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரியும் வாதம் செய்தனர். இதனையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி டீலாபானு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவிற்கு 30 நாட்கள் நாள்தோறும் காலை 10 மணிக்கு மதுரை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடனான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர் அய்யப்பராஜா - சூர்யா மீது திமுக அரசு தொடுத்த பொய் வழக்கில் நீதி கிடைத்துள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் அளித்த நிலையில் வாகனத்தில் ஏறி புறப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, “ஆளும்கட்சிக்கு நாளைக்கு இருக்கிறது, நாளை கிழித்து தொங்கவிடுவேன்” என எச்சரிக்கை விடுக்கும் வகையில் குரல் எழுப்பியபடி புறப்பட்டார்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
சென்னை
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion