கட்டண கொள்ளையில் ஈடுபடும் கொடைக்கானல் விடுதிகள் - கோட்டாட்சியர் கடும் எச்சரிக்கை
’’கொடைக்கானலில் உள்ள விடுதிகளில் எந்த நேரத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினாலும் மறுநாள் காலை 10 மணிக்கு அறையை காலி செய்ய வேண்டும் என்பது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது’’
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், வெளி ஊர்களிலிருந்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தனியார் தங்கு விடுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதால் தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகளிடையே புகார் எழுந்து வந்த நிலையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனியார் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி உரிமையாளர்களுக்கு கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு விடுதிகளில் உணவு தயார் செய்ய பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த கூடாது. உணவு பொருட்களில் வண்ணப்பொடிகள் பயன்படுத்த கூடாது. காலாவதியான இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது மற்றும் உணவு விடுதிகளில் கட்டாயமாக விலை பட்டியல் அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டது,
மேலும் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளை பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளை 24 மணி நேரம் தங்குவதற்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், அவ்வாறு வசூலிக்காமல் சுற்றுலா பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் தங்கும் விடுதிகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் முருகேசன் எச்சரித்தார், இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தங்கும் விடுதி, உணவு விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுவாக தமிழகத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் பயணிகள் தங்குவதற்கு 24 நேரம் அனுமதிக்கப்படுகிறது இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் எந்த நேரத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினாலும் மறுநாள் காலை 10 மணிக்கு அறையை காலி செய்ய வேண்டும் என்பது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தேனி : காசிக்கு நிகரான பெரியகோவில், பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!