மேலும் அறிய

ராமநாதபுரத்தில் கோஷ்டி பூசலால் திக்குமுக்காடும் திமுக...! - எம்.எல்.ஏவின் கணவரை தள்ளிவிட்டதால் பரபரப்பு

’’கோஷ்டிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மானமதுரை எம்.எல்.ஏ தமிழரசியின்  கணவரை, பரமக்குடி வடக்கு நகர் பொறுப்பளர் ஜீவானந்தம் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது’’

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை முன்னாள் அமைச்சர் 'சுப தங்கவேலன்' தலைமையில் ஒரு அணியாகவும் மாவட்ட பொறுப்பாளர் 'காதர்பாட்சா முத்துராமலிங்கம்'  தலைமையிலான ஒரு அணியாகவும்  செயல்பட்டு வந்தனர். இந்தநிலையில் தேர்தல் வந்தது மாவட்டத்திலுள்ள 4  தொகுதிகளிலும்  திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ராமநாதபுதம், பரமக்குடி (தனி) முதுகுளத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் திமுகவும், திருவாடானையில் காங்கிரசும் என, நான்கிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே வென்றது. இதனால், கட்சி மேலிடத்தில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்துக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவே பார்க்கப்பட்டது. 

ராமநாதபுரத்தில் கோஷ்டி பூசலால் திக்குமுக்காடும் திமுக...! - எம்.எல்.ஏவின் கணவரை தள்ளிவிட்டதால் பரபரப்பு

      'யாருக்கு அமைச்சர் பதவி'

இதில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக மாவட்ட  பொறுப்பாளர் காதர்பாட்சா என்கின்ற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவாக தேர்வானார். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் தற்போது திமுக சார்பில்  முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அவரும் சட்டமன்ற உறுப்பினரானார்.  இந்த நிலையில் மாவட்ட திமுக அரசியல் களம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன்  அணியினர் ராஜகண்ணப்பன் பக்கம் நிற்கத் தொடங்கினர். எந்த காரணத்தைக் கொண்டும் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கிடைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இதற்காக கட்சி மேலிடத்தில் காய் நகர்த்தி ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி கிடைக்கச் செய்தனர். அதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குமே தேர்தல் நேரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தான்  பணத்தை வாரி இறைத்தார் என்ற தகவலும் இருக்கிறது.  இதற்காகவே திமுக தலைமை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரத்தில் கோஷ்டி பூசலால் திக்குமுக்காடும் திமுக...! - எம்.எல்.ஏவின் கணவரை தள்ளிவிட்டதால் பரபரப்பு

இது ஒருபுறமிருக்க, முன்னாள் அமைச்சர் அணியினரும் இந்நாள் அமைச்சர் அணியினரும் ஒன்றாக இணைந்த பிறகு மாவட்ட பொறுப்பாளர் அணி தனிமைப் படுத்தப்பட்டது. இதனால் விரிசல் விரிந்தது. ராஜகண்ணப்பன் அமைச்சராக பதவியேற்ற பிறகு, முன்னாள் அமைச்சர் சுப தங்கவேலன் தலைமையில் இயங்கி  வந்த அணி அப்படியே ராஜகண்ணப்பன் பக்கம் முழுமையாக சாயத் தொடங்கியது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவினர், போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையிலான ஒரு கோஷ்டியும்,  ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் ஒரு கோஷ்டியும் பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றனர். இது கட்சியினரிடையே அவ்வப்போது சிறுசிறு சலசலப்பை உண்டாக்கியது.

ராமநாதபுரத்தில் கோஷ்டி பூசலால் திக்குமுக்காடும் திமுக...! - எம்.எல்.ஏவின் கணவரை தள்ளிவிட்டதால் பரபரப்பு

சுவர் விளம்பரத்தில் இடம்பிடிக்க ஏற்பட்ட தகராறில் திமுக ஒன்றிய செயலாளர் உள்பட 15 பேர் மீது அபிராமம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு;

கமுதி அருகே பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி  நடைபெறவிருக்கும் முத்து ராமலிங்கத் தேவர் குருபூஜை விழா தொடர்பாக திமுக கட்சி சார்பில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்களை வரவேற்க  சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், 'நேதாஜி சரவணன்' திமுக கமுதி ஒன்றிய துணைச் செயலாளருக்கும் (அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆதரவாளர்)

கமுதி திமுக ஒன்றிய செயலாளர் வி.வாசுதேவனுக்கும்  (காதர் பாட்சா  முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்) இந்த இரு கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, கமுதி  திமுக ஒன்றிய செயலாளர் வாசுதேவன் உள்பட   15 பேர் மீது கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி  அபிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

'வீதிக்கு வந்த கோஷ்டி மோதல்'

ராமநாதபுரத்தில் கோஷ்டி பூசலால் திக்குமுக்காடும் திமுக...! - எம்.எல்.ஏவின் கணவரை தள்ளிவிட்டதால் பரபரப்பு

இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற்ற  இமானுவேல் சேகரன் நினைவுதினத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்துவதில் ராஜகண்ணப்பன்-காதர்பாட்சா முத்துராமலிங்கம் கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உட்கட்சிப்பூசலை மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமானுவேல் சேகரனின் 64 ஆவது நினைவு தினம்  நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் பரமக்குடியிலுள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். 

இமானுவேல் சேகரனின் நினைவுதினம், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து அமைதியான முறையில் நடந்ததது. பரமக்குடி பேருந்து நிலையம் அருகிலுள்ள இமானுவேல் சேகரன்  நினைவிடத்தில் திமுக சார்பில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், போக்குவரத்து த்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் முஸ்லீம் லீக் எம்.பி நவாஸ்கனி ஆகியோர் அஞ்சலி செலுத்த வந்தனர். அஞ்சலி செலுத்துவதில் ராஜகண்ணப்பன்- காதர்பாட்சா முத்துராமலிங்கம் கோஷ்டிகளுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவாகி மானமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியின்  கணவரை, பரமக்குடி வடக்கு நகர் பொறுப்பளர் ஜீவானந்தம் தள்ளிவிட்ட சம்பவம்  கட்சியினரிடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தில் கோஷ்டி பூசலால் திக்குமுக்காடும் திமுக...! - எம்.எல்.ஏவின் கணவரை தள்ளிவிட்டதால் பரபரப்பு

இதைப் பார்த்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிர்ச்சியடைந்தார். இதில் பரமக்குடி திமுக எம்.எல்.ஏ பின்னுக்குத் தள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பின்பு ஒருவழியாக சமாதானமாகி, அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர். இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தால், மாவட்ட திமுகவிலுள்ள உட்கட்சிப்பூசலை மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி சினிமா காட்சியில் வருவது  போன்று மகிழ்மதி சாம்ராஜ்யத்தில்  மகுடம் சூட்டிக்கொள்வதில் பாகுபலிக்கும் பல்வால்  தேவனுக்கும் ஏற்பட்ட மோதல் போல நாளுக்கு நாள்  விரிசல் விரிவடைந்து வருகிறது. திமுக தலைமையும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அடுத்த நிகழ்ச்சியில் என்ன நடக்குமோ தெரியவில்லை மூல(முதல்)வருக்கே வெளிச்சம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
Embed widget