மேலும் அறிய
Advertisement
மதுரையில் கண்மாய் மடையில், மிகப் பழமையான துண்டுக் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
கி.பி.9 ,13, மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த வெவ்வேறு காலக்கட்டத்தை கொண்ட துண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
கடந்தாண்டு மதுரை தே.கல்லுப்பட்டி அடுத்த காரைக்கேணி, செங்கமேடு பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிலை, ராஜராஜ சோழன் கல்வெட்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் து.முனீஸ்வரன் அவரின் குழுவினர், தேவட்டி முனியாண்டி கோயில் அருகில் செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அவற்றின் சுவரில் உள்ள கற்களில் பழைமையான தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து இதை கண்டுபிடித்த குழுவினரை அரசு அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். அதே போல் சமீபத்தில் தே.கல்லுப்பட்டி அருகில் கி.பி.10 நூற்றாண்டை சேர்ந்த பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கபட்டது. இதனால் வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தொல்லியல் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தே.கல்லுப்பட்டி அருகே வில்லூர் பெரிய கண்மாய் மடையில் கி.பி 9 ,13, மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த வெவ்வேறு காலக்கட்டத்தை கொண்ட துண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி இருந்து கள்ளிக்குடி செல்லும் வழியில் உள்ள வில்லூரில் தொல்லியல் கள ஆய்வாளர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இது குறித்து முனைவர் து.முனீஸ்வரன் வெளியிட்ட தகவலில், " வில்லூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைந்துள்ளது. முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டியில் 1 அடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது கண்ணில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் மூன்று வரி கொண்ட கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால் சொற்களின் பொருள் அறிய முடியவில்லை.
கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு செய்தி :
பெரிய கண்மாய் மூன்றாவது கண் மடையில் வலது புற சுவரின் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டினை படியெடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறையில் இருந்து ஒய்வு பெற்ற முனைவர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்தபோது எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். இக்கல்வெட்டினை வேற பகுதியில் இருந்து எடுத்து வந்து பெரிய கண்மாய் கண் மடை கட்டப்பட்டு இருக்கலாம் என்றார்.
மேலும் செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion