திண்டுக்கல் : கொட்டித் தீர்த்த கோடை மழை - மகிழ்ச்சியில் பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் உட்பட பல்வேறு இடங்களில் கோடை மழை அதிகமாக பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகமெங்கும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் குறையாமல் இருந்து வந்தது. அதில் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்துவந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஒரு சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம், கோடை வெப்பத்தை தணிக்க மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே இருந்தது. மாவட்டம் முழுவதும் வழக்கம்போல் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. ஆனால் அதற்குமேல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய சாரல் மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. வெப்பத்தை தணிக்கும் வகையில் கோடை மழை பெய்ததால் பலரும் ஆர்வமுடன் மழையில் நனைந்தபடி சென்றனர்.
திடீரென பலத்த காற்றுடன் மழையும் சேர்ந்து கொண்டதால் எதிரில் வருபவர் கூட தெரியாத அளவிற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் திண்டுக்கல் ஆர்எஸ் சாலை, பழைய ஆர்எஸ் சாலை, நேருஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. இதில் நாகர் நகர் , ஆர்எஸ் சாலையில் அளவுக்கு மீறி வெள்ளம் ஓடியதால் இருசக்கர வாகனங்கள் கார்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டது.மேலும் இருசக்கர வாகனங்களில் சென்ற அவர்களை பலத்த காற்று கீழே தள்ளிய சூழல் ஏற்பட்டது. திண்டுக்கல் பல இடங்களிலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்கள் இருசக்கர வாகனங்கள் காற்றில் சாய்ந்து விழுந்தன.
மேலும் வீடுகள் மொட்டை மாடிகளில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது. சாலையோர கடைகளில் தார்ப்பாய் கூரைகள் காற்றில் பறந்தன. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. சுட்டெரித்த கோடை வெயிலின் கடுமையான தாக்கம் கோடை மழை தனித்ததால் இரவில் வெப்பம் மாறி இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை கொட்டித் தீர்த்தது இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும், இன்றும் காலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாத்தலமான வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் இரவிலும் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டத்தின் மழை அளவு நிலவரம் :-
Date:10.4.2022
Rainfall data(in mm):
1) Dindigul-12.7
2) Kodaikanal-20
3) Palani-5
4) Chatripatti-0
5) Natham-12.5
6) Nilakottai-30
7) Vedasandur-1.2
8) Tobacco Station-1
9) Kamatchipuram -22.2
10) Kodaikannal boat-18
Total =122.6
Average-12.26