திண்டுக்கல் : புனித சந்தியாகப்பபர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடக்கம்
புனித சந்தியாகப்பபர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 500 காளைகள், 225 வீரர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் புனித செபஸ்தியார், புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 500 காளைகள் மற்றும் 225 வீரர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைpபட்டியில் உள்ள புனித செபஸ்தியார், புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஜல்லிகட்டு நடத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 225 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. கால்நடை மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்பே காளைகளும், மாடு பிடி வீரர்களும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை கொடி அசைத்து திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார்.
சில காளைகளோ வாடிவாசல் திறந்த உடனே மாடு பிடி வீரர்களிடம் சிக்காமல் சீறி பாய்ந்து சென்று பரிசுகளை அள்ளிச் செல்கிறது. காளைகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அடங்காத காளைகளையும் அடக்கி மாடு பிடி வீரர்கள் பரிசுகளை பெற்று வருகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிகட்டு போட்டியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினரும், மருத்துவ அவரச ஊர்திகளும் தயார் நிலையில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்