CTET Exam: மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு விடைத்தாளை வெளியிட்ட சி.பி.எஸ்.இ...! எவ்வாறு டவுன்லோட் செய்வது?
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு எனப்படும் சி.டி.இ.டி தேர்வின் விடைத்தாளை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய ஆசிரிய தகுதித் தேர்வு எனப்படும் சி.டி.இ.டி தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், கடந்தாண்டு மத்திய ஆசிரிய தகுதித்தேர்வு டிசம்பர் 28-ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. நேற்று சி.டி.இ.டி. விடைத்தாளை வெளியிட்டுள்ளது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான விடைத்தாளை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று சி.டி.இ.டி. தேர்வுகளுக்கான விடைத்தாளை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
விடைத்தாளை எவ்வாறு பதிவிறக்கம் செய்து சரிபார்ப்பது?
- அதிகாரப்பூர்வ இணையதளமான https://ctet.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- முகப்பு பக்கத்தில் அண்மை செய்திகள் (லேட்டஸ்ட் செய்திகள்) என்று தலைப்பை கிளிக் செய்யவும்
- அதில் சி.டி.இ.டி. விடைத்தாள் 2023 என்று இருக்கும்
- அதை கிளிக் செய்து உங்கள் பதிவெண்ணுடன் லாகின் செய்யுங்கள்
- பின்னர் விடைத்தாள் திரையில் தோன்றும்
- நீங்கள் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சி.டி.இ.டி. தேர்வின் கடைசி விடைத்தாளை சி.பி.எஸ்.இ. விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளது.
விடைத்தாளில் ஏதேனும் தவறுகள் இருப்பதை நிபுணர்கள், கல்வி வல்லுனர்கள் சுட்டிக்காட்டினால் அதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
மேலும் படிக்க: உ.பி. ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்: தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு! கொலையா? தற்கொலையா?
மேலும் படிக்க: Tirumala Tirupati : திருப்பதி தரிசனம்.. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான ஆன்லைன் டிக்கெட்.. இந்த நாட்களில் மட்டுமே அனுமதி...