மேலும் அறிய

தனியார் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர்கள்

தனியார் மருத்துவமனைக்கு உள்ள விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் திண்டுக்கல்லில் பேட்டி

திண்டுக்கல்லில்  தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.  பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 வழங்கினார்கள் .

தனியார் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர்கள்

பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட் என்ற வகையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தினால் எந்த நோயாளிகளுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவருக்கு மட்டும் 10 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. யாருடைய அறிவுறுத்தலும் இன்றி ஆறு பேர் தாங்களாகவே லிப்டில் பயணம் செய்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்தனர். மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் ஒரு குழந்தைகள் ஆகும். மருத்துவமனையில் இருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைமூட்டம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்களால் ஏராளமானோர் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களை  மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தனியார் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர்கள்

தகவல் கேள்விப்பட்டவுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர்க்கள அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று பெரும்பாலானோர் வீடு திரும்பி உள்ளனர். இதில் 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  41 பேரில் 6 பேர் மரணம் அடைந்தது போக மீதமுள்ள 35 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர்கள்

31 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சை திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.3 இலட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து முதல்வர் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினோம். பலத்த காயம் அடைந்த 4 பேருக்கு தலா ஒரு லட்சத்திற்க்கான காசோலை வழங்கப்பட்டது. லேசான காயம் அடைந்த 31 பேருக்கு 50 ஆயிரம் விதம் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 41 பேருக்கு 37 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு தனியார் மருத்துவமனைக்கு எந்தந்த வசதிகள் இருக்க வேண்டுமோ அதுகுறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறையினர் முழு அறிக்கை கொடுத்தவுடன் எந்த மாதிரியான விதிமீறல்கள் உள்ளது என ஆய்வு செய்யப்படும். தனியார் மருத்துவமனைக்கு உள்ள விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Embed widget