பழனி முருகன் கோயிலில் 26 நாட்களில் 4.59 கோடி ரூபாய் உண்டியல் வசூல்
4 கோடியே 59 லட்சத்து 48 ஆயிரத்து 430 ரூபாய் ரொக்கம், 244 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், 1767 கிராம் தங்கம், 1575 வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழ் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்காக அதிகமான வருகை தந்ததால் கடந்த 26 நாட்களில் கோவிலில் உண்டியல் நிரம்பியது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். கோயில் உண்டியல் முழுவதுமாக நிரம்பிய நிலையில் உண்டியல் எண்ணும் பணிகள் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று முன் தினம் தொடங்கிய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது இரண்டு நாட்களுக்கு நீடித்தது. அதில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கப்பணம் 4 கோடியே 59 லட்சத்து 48 ஆயிரத்து 430 ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் 244 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் 1767 கிராம் தங்கம், 1575 வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவைகள். வெள்ளியாலான காவடி, வளையல், கொலுசு போன்ற பொருட்களையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
இ- பைக்குகளில் பேட்டரி மாற்றும் வசதி... மத்திய அரசிடம் பரிந்துரைத்த நிதி ஆயோக்!
இதுதவிர உண்டியலில் பித்தளை, ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் போன்றவைகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்து குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் உண்டியலை திறந்து என்னும்போது திருக்கோயில் பணியாளர்கள் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்