நத்தம் அருகே நாட்டு வெடி தயாரித்தபோது விபத்து - உடல் சிதறி 2 பேர் உயிரிழந்த சோகம்
நத்தம் அருகே நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட விபத்தில் ஈடுபட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலி.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் வெடிகுண்டு வெடித்த விபத்தில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி மங்கம்மா சாலை அருகே தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் தார்பாயினால் செட் அமைத்து அரசு அனுமதியின்றி பேப்பர் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் மங்கம்மா சாலையை சேர்ந்தவர்கள் ராஜா (வயது 28) கருப்பையா (வயது 25). பேப்பர் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டபோது, திடீரென வெடி வெடித்து சிதறியதில் இருவரது உடல் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
Asia Cup 2023, IND Vs BAN Live: 4வது விக்கெட்டும் போச்சு.. தடுமாறும் வங்கதேசம்.. அசத்தும் இந்தியா..!
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நத்தம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு அனுமதியின்றி பட்டாசு வெடி தயாரித்தது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து சம்பவம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Senthil Balaji Custody: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு