மேற்கு வங்க ரயில் விபத்து; ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ரயில் விபத்தை கண்டித்தும், ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வற்புறுத்தியும் திண்டுக்கல் மாவட்டம் மாநகர காங்கிரசார் திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷனை முற்றுகையிட்டனர்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தை கண்டித்தும், ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வற்புறுத்தியும் திண்டுக்கல் மாவட்டம் மாநகர காங்கிரசார் திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷனை முற்றுகையிட்டனர்.
நேற்று காலை மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கஞ்சன்ஜங்கா ரயிலின் மூன்றில் இருந்து ஐந்து ரயில் பெட்டிகள் வரை சேதமடைந்தன. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
NEET UG Row: நீட் தேர்வில் தவறு இருந்தால்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
இந்த ரயில் விபத்தை கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷனை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ரயில்வே துறையை முறையாக கவனிக்காமல் அதனை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார்.
பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்றும், நேற்று நடைபெற்ற ரயில் ரயில் விபத்துக்கு முழு காரணமும் பாஜக அரசை சேர்ந்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தான் என்றும், எனவே ரயில்வே விபத்திற்கு முழு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதவி விலக வேண்டும் என்று கூறினார். பின்னர் மைனாரிட்டி மோடி அரசுக்கு எதிராகவும், மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Gingee K. S. Masthan: மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி - திமுக அறிவிப்பு
இந்நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகி ஐயா ராமு ராமசாமி, முகமது அலியார், அப்பாஸ் மந்திரி, வேங்கை ராஜா, மதுரை வீரன், காஜாமைதீன், காளிராஜ், அப்துல் ரகுமான், பாரதி, அம்சவல்லி, நாகலட்சுமி, சகாயம், அமீர், சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.