திண்டுக்கல்லில் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் கல் வீசி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பள்ளி விடும் நேரத்தில் சம்பவம் நடைபெற்றதால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பீதி அடைந்து சென்றனர்.
திண்டுக்கல்லில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த இரு தரப்பினரும் கல் வீசி மோதலில் ஈடுபட்டதால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் பேஸ்புக் தளத்தில் மோடியை அவதூறாக பேசியதை கண்டித்து பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் பாஜகவினர் திரண்டனர். அங்கிருந்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்ல முயலும் போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் பாஜகவினர் சிலர் வேறு வழியாக காங்கிரஸ் அலுவலகம் நோக்கி ஓடிச் சென்றனர். அப்பொழுது காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த இரு தரப்பிலும் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனர்.
Meftal Drug: மாதவிடாய் வயிற்று வலிக்கு இந்த மருந்தை பயன்படுத்தறீங்களா? எச்சரிக்கை விடுத்த ஐபிசி
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி விடும் நேரத்தில் சம்பவம் நடைபெற்றதால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பீதி அடைந்து சென்றனர். பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் கலைத்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.