மேலும் அறிய

பழனியில் கி.பி.18 ஆம் நூற்றாண்டு செப்புப் பட்டயம் கண்டுபிடிப்பு

கி.பி.18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கண்டறியப்பட்ட செப்புப் பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1691 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1769 ஆகும்.

பழனியில் கி.பி.18 ஆம் நூற்றாண்டு செப்புப் பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செப்புப் பட்டயமானது பாலசமுத்திரம் ஜமீன்தார் வழங்கியது என தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

பழனியில் கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புப்பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த வி.மீனா என்பவரிடம்  இந்தப் பட்டயம் உள்ளது. செப்புப்பட்டயத்தை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் கொடுத்து மீனா அதைப் படித்து விளக்கம் அளிக்கும்படி வேண்டி இருந்தார்.

IND vs SA T20 Final LIVE Score: ரோஹித் படையுடன் மோதும் மார்க்ரம் படை! சாம்பியன் பட்டம் யாருக்கு?

பழனியில் கி.பி.18 ஆம் நூற்றாண்டு செப்புப் பட்டயம் கண்டுபிடிப்பு

செப்புப் பட்டயத்தை ஆய்வு செய்த நாராயணமூர்த்தி கூறியதாவது, செப்புபட்டயம் சாலிவாகன சகாப்தம் 1691 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1769 ஆகும். பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பாளையப்பட்டு ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கர் இந்தப்பட்டயத்தை வழங்கி உள்ளார்.

பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கட்டய கவுண்டர் என்பவருக்கு பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஓர் இடத்தை சர்வ சுதந்திரப் பாத்தியமாக வழங்கிய செய்தியை இந்த செப்புப்பட்டயம் 10 வரிகளில் தெரிவிக்கிறது. பழனி அடிவாரம் மேற்கு கிரிவீதியில் கிழக்கு மேற்காக 53 முழமும், தெற்கு வடக்காக 67 முழமும் அளவுள்ள இடத்தையும் அதில் உள்ள கல்கட்டடத்தையும் பட்டயம் செய்து கொடுத்திருக்கிறார்.

IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!

பழனியில் கி.பி.18 ஆம் நூற்றாண்டு செப்புப் பட்டயம் கண்டுபிடிப்பு

இந்த செப்புப் பட்டயம் 23.5× 16 செ.மீ அளவுடனும், 194 கிராம் எடையுடனும் உள்ளது. பட்டயத்தில் உள்ள எழுத்துக்கள் சிற்றுளி மூலம் கொத்தப்பட்டுள்ளன. இந்தச் செப்புப் பட்டயத்தை பாலசமுத்திரம் பாளையப்பட்டு ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கரும் அவர் தாயாதியான ஆயக்குடி பாளையப்பட்டு ஜமீன்தார் ஓவளக் கொண்டம நாயக்கரும் இணைந்து வழங்கியுள்ளனர் என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget