Dindigul: மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை - வனத்துறை தீவிர விசாரணை
தோனிமலை குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மின்சார கம்பியில், யானையின் பாகம் பட்டு சுமார் 200 அடி பள்ளத்தில் யானை தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது குளிர்ந்த சீசன் நிலவி வருகிறது. இதனை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை நாட்களில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பிரபலமான சுற்றுல தலம்
வனப்பகுதியில் உள்ள மோயர்பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை மற்றும் ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர். பின்னர் ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி உள்ளது.
Crime: இரவு முழுக்க இளைஞருடன் பேச்சு - காதல் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை
குடியிருப்புகளுக்குள் வரும் வனவிலங்குகள்
கொடைக்கானல் கீழ் யானை, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் யானைகள் மற்றும் காட்டு மாடுகள் விவசாயம் நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கும் வனத்தில் இருந்து வெளியே வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோனிமலை இப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
World Laughter Day 2024: “கலகலவென சிரி.. கண்ணீர் நீர் வர சிரி” - உலக சிரிப்பு தினம் இன்று!
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு
இவர்களுக்கு மின்சாரம் வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆண் யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதி வழியாக வந்ததாக கூறப்படுகிறது. இதில் தோனிமலை குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மின்சார கம்பியில், யானையின் பாகம் பட்டு மின்சாரம் தாக்கி சுமார் 200 அடி பள்ளத்தில் யானை தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை எடுத்துதோனிமலை பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை இப்பகுதியில் யானை போன்று பள்ளத்தில் விழுந்து கிடப்பதாக பார்த்து கன்னிவாடி வனச்சர அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். அங்கு சென்ற மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜ்குமார் மற்றும் வன அதிகாரிகள் தற்போது யானை இறந்து கிடந்தது குறித்து விசாரணை மேற்கொள்கின்றனர் அதேபோல் யானை எதனால் இறந்தது என்பது குறித்து சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர்கள் உடல் பரிசோதனையும் செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானை இறந்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.