(Source: ECI/ABP News/ABP Majha)
Dindigul: 10ம் வகுப்பில் முதலிடம்! மாணவிக்கு போன் போட்டு பாராட்டிய அண்ணாமலை!
10ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி காவியாஸ்ரீயாவிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போனில் அழைத்து வாழ்த்து கூறினார்.
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் மாணவியை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.
முதலிடம் பிடித்த பத்தாம் வகுப்பு மாணவி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டுபுதூரைச் சேர்ந்தவர் விவசாயி கருப்புசாமி. இவரது மனைவி ரஞ்சிதம். இவர்களது மகள் காவிய ஸ்ரீயா ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கொசவபட்டி அக்ஷயா அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 499 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தின் முதல் இடம் பிடித்தார்.
அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி 'காவியஜனனி' 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். இந்த நிலையில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
Today Movies in TV, May 12: சச்சின் முதல் கேப்டன் மில்லர் வரை.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை
பள்ளி மாணவி காவியா ஸ்ரீயாக்கு பாரதிய ஜனதா கட்சி ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய தலைவர் தளபதி ரகுபதி மற்றும் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி பாராட்டினார்கள். முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை செல்போன் வழியாக தொடர்புகொண்டு மாணவி காவியஸ்ரீயாவிற்கு வாழ்த்து தெரிவித்து பேசியது அம்மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியிடம் பேசிய அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மாணவி விரும்பிய IAS படிப்பிற்கு உதவுவதாகவும் மென்மேலும் நன்கு படித்து வெற்றிபெற வேண்டுமென தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.