கொடைக்கானலில் பழங்குடிகள் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிக்க முயல்வதாக புகார்
பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே நிலம் வாங்கியுள்ள சில நபர்கள் இந்த இடம் முழுவதற்கும் தங்களிடம் பத்திரம் உள்ளது என்றும், பழங்குடியின மக்கள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்
இந்த இடத்தில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே நிலம் வாங்கியுள்ள சில மர்ம நபர்கள் இந்த இடம் முழுவதற்கும் தங்களிடம் பத்திரம் உள்ளது என்றும், பழங்குடியின மக்கள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்து சென்றுள்ளனர். இதனையடுத்து பூர்வகுடி பழங்குடியின மக்கள் தங்கள் வசிக்கும் இடத்தில் ஆதிவாசி மக்களின் கொடியை ஏற்றியும் அதே பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி தமிழக அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை எடுத்துச்சென்று, ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களிடமிருந்து தங்களது இடத்தினை பாதுகாத்து தருமாறும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் அல்லாது இந்திய அளவில் மிக பெரிய போராட்டம் நடத்த போவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.