பிறந்த நாளன்று சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர் - திண்டுக்கல் அருகே சோகம்
பிறந்த நாளன்று நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பேருந்து மீது மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்.

மதுரையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அரசு பேருந்து மீது மோதியதில், இருசக்கர வாகனம் தீப்பிடித்து பேருந்தில் தீ பரவியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரவீன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அட! அது நான் இல்லப்பா!! பெயரால் வந்த குழப்பம்! வழிமாறிப்போன பிரதமருக்கான வாழ்த்து!
மேலும், இருசக்கர வாகனத்தில் உடன்வந்த ஆகாஷ், நரசிம்மன் ஆகிய இரண்டு பேர் படுகாயத்துடன் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து தீப்பிடித்த உடனே பேருந்தில் பயணம் செய்த அனைவரும் உடனே இறங்கியதால் பேருந்திலிருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
பேருந்து மட்டும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்தில் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் உயிரிழந்த மாணவன் பிரவீனுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகைய கவுண்டன்பட்டியில் பைக்கை தலையில் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாகைய கவுண்டன்பட்டி கிராமத்தில் கிழக்குத் தெருவில் வசிக்கும் ஆசை என்ற கனகராஜ் என்பவர் மகன் யுவராஜ் (30). இவர் ஏழாம் வகுப்பு வரைபடித்துவிட்டு தனது சொந்தத் தோட்டத்தில் விவசாய பணி செய்து வந்துள்ளார்.
Somalia : கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறப்பார்கள்! ஐநா சொன்ன பகீர் தகவல்! சோமாலியாவின் சோகம்!
இந்நிலையில் சண்முகா நதி அணை சாலையில் உள்ள அவரது தோட்டத்தில் கிணற்றின் அருகே தலை குப்புற இறந்த நிலையில் அவர் தலைப்பகுதியில் பைக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி தோட்டத்து வேலைக்கு வந்த பணியாளர்கள் உடனடியாக ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தலையில் பைக்கை போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்தும் கொலை செய்த மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த கிராமப் பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்






















