ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
நிதி நிறுவனம் நடத்த உரிமம் பெற 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற திண்டுக்கல் தாலுகா அலுவலக உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், வாடகை கார் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். அதில் போதிய வருமானம் இல்லாததால், காரை விற்றுவிட்டு நிதிநிறுவனம் நடத்த முடிவு செய்தார். இதற்காக உரிமம் பெறுவதற்கு திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அங்கு பணியில் இருந்த உதவியாளர் கணேசன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராஜா புகார் செய்தார். இதையடுத்து ராஜாவிடம் ரூ.5 ஆயிரத்தை உதவியாளர் கணேசன் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு, திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி மோகனா நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கணேசனுக்கு லட்சம் கேட்ட குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் கேரளா வாலிபர்கள் மூன்று நாட்கள் போதை காளான் தேடி வனப்பகுதிக்குள் சிக்கிய விவகாரம் எதிரொலியாக போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த பூண்டி கிராமத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இதே போன்று கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு ஐந்து இளைஞர்கள் வருகை புரிந்தனர். அப்போது பூண்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி அறை எடுத்த அவர்கள் போதை காளானைத் தேடி வனப்பகுதிக்கு சென்று இரண்டு குழுக்களாக தேடி வந்துள்ளனர் .
மூன்று பேர் ஒரு குழுவாகவும் இரண்டு பேர் ஒரு குழுவாகவும் சென்று உள்ளனர் . அப்போது திரும்பி வருவதற்கான வழி தெரியாமல் அடர்ந்த வனப் பகுதிக்குள் உணவு, தண்ணீர் இன்றி மூன்று நாட்களாக தவித்து வந்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து மூன்று நாட்களாக தேடியும் கிடைக்காததால் உறவினர்கள் விரக்தி அடைந்தனர். மேலும் தீ தடுப்பு கோடுகள் போடும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் இவர்களை கண்டு நேற்று பூண்டி கிராமத்தில் கொண்டு வந்து விட்டதை அடுத்து காவல் துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர் .
மேலும் போதை காளான் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தது எதிரொலி மற்றும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளானை தொடர்ந்து விற்று வந்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலையா, கோபாலகிருஷ்ணன் மற்றும் சசிகுமார் ஆகிய மூன்று பேரை கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான தனிப்படை இவர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் போதை காளான் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.. கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து போதை காளான் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்